districts

img

புதிய குற்றவியல் சட்டங்களை திரும்பப் பெறுக!

திருச்சிராப்பள்ளி, ஜுலை 8 - ஒன்றிய பாஜக அரசு கடந்த ஆண்டு 140 எதிர்க்கட்சி எம்.பி.,க் களை சஸ்பெண்ட் செய்து விட்டு எந்தவித விவாதங்களுமின்றி 3 குற்றவியல் சட்டங்களை நாடாளு மன்றத்தில் நிறைவேற்றியது. சமஸ்கிருதத்தில் பெயரிடப்பட்ட அச்சட்டங்கள் ஜுலை 1 முதல் நடைமுறைக்கு வந்துள்ளன.

இந்த சட்டங்கள் ஜனநாயக உரிமைகளுக்கு ஆதரவாக போராட்டம் நடத்துபவர்களை நசுக்குவது, நீதித்துறையின் அதி காரத்தை முழுமையாக பறிப்பதாக உள்ளன. எனவே ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள 3 குற்றவியல் சட்டங்களை திரும்பப் பெற வலி யுறுத்தி, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில் ஜூலை 1 முதல் 8 வரை மாநிலம் தழு விய அளவில் நீதிமன்றப் பணியில் இருந்து விலகி இருந்தனர். 

மேலும் உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் மற்றும் ஒன்றிய அரசு அலுவலகம் முன்பு போராட்டம் என பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றன.

இந்நிலையில் 3 குற்றவியல் சட்டங்களை திரும்பப் பெற வலி யுறுத்தி, வழக்கறிஞர்களின் மாபெரும் பேரணி திங்களன்று நடைபெற்றது. திருச்சி நீதிமன்றம் அருகில் இருந்து துவங்கிய பேரணி உழவர் சந்தை மைதானத்தில் நிறைவடைந்தது.  உழவர் சந்தை மைதானத்தில் நடந்த கண்டனக் கூட்டத்திற்கு திருச்சிராப்பள்ளி மாவட்ட வழக்கறி ஞர்கள் சங்க தலைவர் பாலசுப்ர மணியன் தலைமை வகித்தார். செயற்குழு உறுப்பினர் சுதர்சன் முன்னிலை வகித்தார். 

கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா ளர் கே.பாலகிருஷ்ணன் பங்கேற்று உரையாற்றினார். கூட்டத்தில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கந்தர் வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை, திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் ஆர்.ராஜா, சிபிஐ மாநில செயற்குழு உறுப்பி னர் மூர்த்தி, மூத்த வழக்கறிஞர்  முத்துகிருஷ்ணன், திருச்சிராப் பள்ளி வழக்கறிஞர்கள் சங்க துணைத் தலைவர் மதியழகன், ஜாக் பொதுச் செயலாளர் பன்னீர்செல்வம், ஜாக் சேர்மேன் நந்தகுமார், மற்றும் தமிழ கத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 3000த்திற்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்துகொண்ட னர்.  போராட்டத்தில் வரும் 12ஆம் தேதி வரை மாநிலம் தழுவிய அள வில் நீதிமன்ற பணியில் இருந்து விலகி இருப்பது; 10ஆம் தேதி மாவட்டம் தோறும் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முடிவில் ஜாக் நன்றி தெரிவித்தார்.