கும்பகோணம், ஜூலை 4-
தஞ்சாவூர் மாவட்டம் சுவாமிமலை காவல் சரகம் மனப்படையூர் கிரா மத்தில் உள்ள வீரமாகாளியம்மன் கோவில் திருவிழா கடந்த ஜூலை 1 அன்று இரவு நடைபெற்றது.
இதில் சுவாமி வீதியுலா மற்றும் வழிபாடு நடைபெற்றதை தொடர்ந்து, இரவு 10 மணிக்கு மேல் எவ்வித அனுமதியுமின்றி, விழாக் கமிட்டி ஏற்பாட்டில் ஆபாச கலைநிகழ்ச்சி நடைபெற்றதாக கூறப்படு கிறது. அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த சுவாமிமலை காவல் துறையினர், ஊர் நாட்டாமைகள் மற்றும் விழா குழுவினரிடம் ஆபாச நடனத்திற்கு தடை உள்ளது என தெரிவித்தும், அதனை நிறுத்தாமல் தொடர்ந்து நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளனர்.
இந்நிலையில், நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த சம்பந்தப்பட்ட ஊர் நாட்டாமைகள் மற்றும் பொறுப்பேற்ற 10 பேர் மீது பல்வேறு பிரிவு களின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கோவில் திருவிழாக்களில் அனுமதியின்றி ஆபாச நிகழ்ச்சி நடத்தினால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சுவாமிமலை காவல் ஆய்வாளர் சிவ.செந்தில்குமார் எச்சரித்துள்ளார்.