districts

img

விவசாயத்தில் செயற்கை நுண்ணறிவு : கருத்தரங்கம்

புதுக்கோட்டை ,மே 21-  எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் காபி சர்வதேச நிறுவனம் இணைந்து விவசாயத்தில் செயற்கை நுண்ணறிவு பயன்படுத்துதல் தொடர்பான ருத்தரங்கை புதுக்கோட்டை செவ் வாய்க்கிழமை நடத்தியது. கருத்தரங்கிற்கு காபி தெற்கு ஆசிய இயக்குனர் வினோத் பண்டிட் தலைமை வகித்தார். அவர் பேசுகையில். புதிய முயற்சி யாக விவசாயத்தில் செயற்கை நுண்ண றிவை பயன்படுத்துதல் தொடர்பான ுன்னெடுப்பு தொடங்கப்பட்டுள்ளது. இது விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்றார். கருத்தரங்கை தொடங்கி வைத்து வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை இணை இயக்குனர் எம்.பெரியசாமி பேசு கையில், விவசாயத்தில் பூச்சி. நோய் மற்றும்நுண்ணூட்ட குறைபாடு களை கண்டறிதல் மற்றும் கட்டுப்படுத்து தலில் செயற்கை நுண்ணறிவு பயன் படுத்தப்படுகின்றது.  செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டை விவசாயிகளுக்கு பயனுள்ள வகையில் மேம்படுத்த அனைத்து உதவிகளையும் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை வழங்கும் என்றார். காபி பயிர் நல ஆலோசகர் கணேச மூர்த்தி.திருச்சிராப்பள்ளி வேளாண்மை கல்லூரி. பூச்சியியல்துறை தலைவர் வி.அம்பேத்கர். வேளாண்மை மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மைய செயல் இயக்குனர் கே.சி.சிவ பாலன் ஆகியோர் கருத்துரை வழங்கினர். கருத்தரங்கில் விவசா யத்துறை அலுவலர்கள். விவசாயிகள் ். உழவர் உற்பத்தியாளர் நிறுவன பிரதி நிதிகள். பயிர் மருத்துவர்கள் உள்ளிட்ட 40 பேர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன முதன்மை விஞ்ஞானி ஆர்.ராஜ்குமார் வரவேற்க. கள அலுவலர் டி.விமலா நன்றி கூறினார்.

;