அறந்தாங்கி அரசு பாலிடெக்னிக்கில் ஜூன் 1 இல் சேர்க்கை கலந்தாய்வு
அறந்தாங்கி,மே 30- புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசினர் பாலி டெக்னிக் கல்லூரியில் 2024- 2025 ஆம் ஆண்டுக்கான முதலாம்ஆண்டு மாணவர் சேர்க்கை கலந்தாய்வு ஜூன் 1 ஆம் தேதி சனிக்கிழமையன்று நடைபெறுகிறது. டிப்ளமோ சிவில் இன்ஜினியரிங், டிப்ளமோ மெக்கானிக்கல் இன்ஜினியரிங். டிப்ளமோ எலக்ட்ரா னிக்ஸ் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங், டிப்ளமோ கம்ப்யூட்டர் இன்ஜினியரிங், டிப்ளமோ கமர்சியல் பிராக்டிகல் இன்ஜினியரிங் ஆகிய பாடப்பிரிவுகளுக்கு மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடைபெற உள்ளது . எனவே இக்கல்லூரிக்கு விண்ணப்பித்த மாணவ மாணவிகள் அனைவரும் கலந்தாய்வில் அசல் சான்றி தழ்கள் ஜெராக்ஸ் நகல் (5 செட்) மற்றும் சேர்க்கை கட்ட ணம் ரூ.2112 உடன் கலந்தாய்வில் கலந்த கொள்ளுமாறு கல்லூரி முதல்வர் (பொ) ச.குமார் தெரிவித்துள்ளார்.
பொதுமக்களின் கோரிக்கையால் சிறுவாச்சூரில் கழிவுநீர் வாய்க்கால் சீரமைப்பு
பெரம்பலூர், மே 30- பெரம்பலூர் ஒன்றியம், சிறுவாச்சூர் கிராமத்தில் 2,3,4 ஆகிய வார்டுகளில் உள்ள கழிவுநீர் வாய்க்கால் சுத்தம் செய்யப்படாமல் புதர்கள் மண்டிக்கிடப்பதாக அப்பகுதி மக்கள் பெரம்பலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள ஊராட்சிகள் உதவி இயக்குநர்களிடம் மனு அளித்தனர். இதனையடுத்து உடனடியாக சிறுவாச்சூர் சென்ற வட்டார வளர்ச்சி அலுவலர், சிறுவாச்சூர் ஊராட்சி மன்ற தலைவருடன் கழிவுநீர் வாய்க்காலை பார்வையிட்டு ஆய்வு செய்து உடனடியாக சீரமைக்க வலியுறுத்தினார். இதைத்தொடர்ந்து உடனடியாக ஊராட்சி மன்ற நிர்வாகம் சார்பில் ஜேசிபி இயந்திரம் மூலம் கழிவுநீர் வாய்க்கால் அருகே மண்டிக்கிடந்த புதர்களை அகற்றி சுத்தம் செய்து சீரமைக்கப்பட்டது. ஊராட்சி நிர்வாகம் உடனடியாக சீரமைத்ததற்கு அப்பகுதி மக்கள் பாராட்டும் நன்றியும் தெரிவித்தனர். மேலும் சுற்றுலாத் தல அந்தஸ்து கொண்ட ஸ்ரீமதுரகாளியம்மன் கோவிலுக்கு வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமானோர் வந்து செல்கின்றனர். எனவே சிறுவாச்சூர் ஊராட்சி மன்ற நிர்வாகம் தூய்மைப்பணியில் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
மண்ணின் வளத்தை மேம்படுத்த பசுந்தாள் உரப்பயிர் சாகுபடி செய்வீர் வேளாண் துறை அறிவுறுத்தல்
தஞ்சாவூர், மே.30 - ஒரே பயிரை தொடர்ந்து சாகுபடி செய்யும்போது மண்ணின் வளம் நாளுக்கு நாள் குறைந்த கொண்டே செல்வதால், மண்ணின் வளத்தை மேம்படுத்த அனைவரும் பசுந்தாள் உரப்பயிர் சாகுபடி செய்ய வேண்டும் என பேராவூரணி வட்டார விவசாய பெருமக்களுக்கு வேளாண்மை உதவி இயக்குநர் (பொ) எஸ்.ராணி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: நெற்பயிர் போன்று ஒரே பயிரை தொடர்ந்து சாகுபடி செய்யும்போது மண்ணில் உள்ள பேரூட்டச்சத்துக்கள் அதிக அளவில் மண்ணிலிருந்து பயிரால் எடுத்துக் கொள்ளப்படுகிறது. இதனால் மண்ணில் அதிக அளவில் சத்துக்கள் பற்றாக்குறை ஏற்படுவதோடு மண்ணின் வளமும் குன்றி விடுகிறது. மண்ணின் வளத்தை மேம்படுத்தினால் மட்டுமே மண்ணின் கட்டமைப்பு, பௌதீகத் தன்மை, மண்ணின் நீர்ப்பிடிப்புத் தன்மை மற்றும் நுண்ணியிரிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்ய முடியும். தமிழ்நாடு முதலமைச்சரின், “மண்ணுயிர் காத்து மன்னுயிர்க் காப்போம்” எனும் திட்டத்தின் கீழ் மண்ணின் வளத்தை மேம்படுத்த 50 விழுக்காடு மானிய விலையில், பசுந்தாள் உர விதைகள் மற்றும் 50 விழுக்காடு மானிய விலையில் திரவ உயிர் உரங்கள் ஆகியவற்றை வேளாண்மை விரிவாக்க மையங்கள் மூலம் விநியோகம் செய்யப்பட உள்ளது. எனவே, பசுந்தாள் உரப்பயிர் சாகுபடி செய்ய உள்ள விவசாயிகள் மற்றும் திரவ உயிர் உரங்கள் பயன்படுத்தும், விவசாயிகள் உடனடியாக தங்கள் பெயர்களை தொடர்புடைய வேளாண்மை உதவி அலுவலர்களிடம் முன்பதிவு செய்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சிங்கம்புணரியில் மஞ்சுவிரட்டு
சிவகங்கை, மே 30- சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி கிரா மத்தின் சார்பில் சீரணி அரங்கம் பெரியகடை வீதி யில் பாரம்பரிய இளவட்ட மஞ்சுவிரட்டு நடை பெற்றது. சிவகங்கை, திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்க ளில் இருந்து 200-க்கும் மேற்பட்ட காளைகள் கலந்துகொண்டன. முன்னதாக கிராமத்தின் சார்பில் சிங்கம் புணரி சேவுகப்பெருமாள் அய்யனார் கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. மேலும் கடை வீதிகளில் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப் பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. காளை கள் முட்டியதில் லேசான காயமடைந்தனர். காயமடைந்த 10-க்கும் மேற்பட்டோருக்கு அரு கில் உள்ள சிங்கம்புணரி அரசு தாலுகா தலைமை மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
பாதிரியார் வீட்டில் திருடியவர் 24 மணி நேரத்தில் கைது
புதுக்கோட்டை, மே 30- புதுக்கோட்டை நகரில் பாதிரியார் வீட்டில் பூட்டை உடைத்து நகைகளைத் திருடியவர், 24 மணி நேரத்துக்குள் போலீஸாரால் கைது செய்யப்பட்டார். புதுக்கோட்டை கணேஷ்நகர் முதல் வீதியில் வசித்து வருபவர் ஜான் தேவசகாயம் (56). இவர், மாலை யீட்டிலுள்ள தேவாலயத்தில் பாதிரியாராக உள்ளார். கடந்த 22ஆம் தேதி இவர் குடும்பத்துடன் கோவைக்குச் சென்றுவிட்டு 28ஆம் தேதி வீடு திரும்பினார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, உள்ளே இருந்த நகைகள் திருடப்பட்டிருந்தன. இதைத் தொடர்ந்து, மாவட்டக் காவல் கண்கா ணிப்பாளர் வந்திதா பாண்டே, தனிப்படை அமைத்து குற்ற வாளியைப் பிடிக்க உத்தரவிட்டார். இந்த நிலையில் பாதிரியாரின் வீட்டிலிருந்து சேகரிக்கப்பட்ட கைரேகைகள், வழக்கமான நகைத் திருட்டு குற்றவாளிகளின் கைரேகைகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கப்பட்டன. அப்போது, மதுரை திருமங்கலம் அருகேயுள்ள கூத்தியார்குண்டு இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமைச் சேர்ந்த இலங்கைத் தமிழர் கேதீஸ்வரன் (34) என்பவரின் கைரேகையுடன் ஒத்துப்போனது. இதைத் தொடர்ந்து அங்கு விரைந்த தனிப்படையினர், கேதீஸ்வரனைக் கைது செய்தனர். அவரிடமிருந்து, ரூ. 14.45 லட்சம் மதிப்புள்ள 36 பவுன் தங்க நகைகளையும், ஒரு லட்சம் மதிப்புள்ள வைர நெக்லஸையும் பறிமுதல் செய்தனர். 24 மணி நேரத்தில் கொள்ளையனை கைது செய்து நகைகளைப் பறிமுதல் செய்த தனிப்படையினரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே நேரில் அழைத்துப் பாராட்டினார்.
அக்னிவீர் வாயு இசைக் கலைஞர் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்
தஞ்சாவூர், மே.30 - அக்னிவீர் வாயு (இசைக் கலைஞர்) தேர்விற்கு பெங்க ளூருவில் இந்திய ராணுவத்தால் 03.07.2024 முதல் 12.07.2024 வரை ஆட்சேர்ப்பு பேரணி நடைபெறவிருக்கிறது. இதில் பங்கேற்க 05.06.2024 வரை விண்ணப்பிக்க லாம். ஜனவரி 2, 2004 அல்லது அதற்குப் பிறகு பிறந்த வர்கள் மற்றும் ஜூலை 2, 2007 அல்லது அதற்கு முன் பிறந்த வர்களாக இருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். கல்வித் தகுதியை பொறுத்தவரை 10 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் வயலின், கிட்டார், பியானோ போன்ற ஏதேனும் ஒரு இசைக் கருவியில் வாசிக்கும் திறன் பெற்றிருக்க வேண்டும். உடல் தகுதியை பொறுத்தவரை ஆண்கள் 162 செ.மீ உயரமும், பெண்கள் 152 செ.மீ உயரமும் இருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை https://agnipathvayu.cdac.in என்ற இணையதளம் வாயிலாக பார்க்கவும். எனவே, அக்னிவீர் வாயு (இசைக்கலைஞர்) தேர்விற்கு நடைபெறவுள்ள பேரணியில் விருப்பம் உள்ள இளை ஞர்கள் கலந்து கொண்டு பயனடையுமாறு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார்.
பாபநாசம் ஒன்றியத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு
பாபநாசம், மே 30- தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் ஒன்றியத்தில் நடை பெற்று வரும் வளர்ச்சித் திட்ட பணிகளை தஞ்சாவூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பால கணேஷ் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பாபநாசம் அடுத்த கோபுராஜபுரம் ஊராட்சியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ 29 லட்சத்து 37 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டடத்தையும், ரூ 1 கோடியே 21 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பீட்டில் கிராம சாலைகள் மேம்பாடு திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் சாலைப் பணிகள், பாபநாசம் அடுத்த திருப்பாலைத்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் குழந்தை நேய பள்ளி கட்டட நிதி ரூ. 32 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட இரண்டு வகுப்பறை பள்ளி கட்டடம் என மொத்தம் ரூ 1 கோடியே 83 லட்சத்து 87 ஆயிரம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை திட்ட இயக்குனர் பால கணேஷ் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பணிகளைத் தரமாக விரைந்து முடிக்க ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். ஆய்வின் போது பாபநாசம் ஊராட்சி ஒன்றிய ஆணை யர்கள் உடனிருந்தனர்.
ஜெயங்கொண்டத்தில் 3 போலி மருத்துவர்கள் கைது
அரியலூர், மே 30- ஜெயங்கொண்டம் பகுதியில் போலி மருத்துவர்கள் 3 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண் டம் சுற்றுவட்டார பகுதிகளில் ஆங்கில மருத்துவ முறையை பின்பற்றி சிகிச்சை அளிப்பதாக சமூக ஆர்வலர்கள், பொது மக்கள் சார்பாக அரியலூர் பெரம்பலூர் மாவட்ட மருத்துவ மற்றும் ஊரக நலப் பணிகள் மருத்துவர் மாரிமுத்துவுக்கு புகார் அளித்தனர். அதே நேரத்தில் ஜெயங்கொண்டம் அருகே ராஜேந்திர சோழன் வெட்டிய புகழ்பெற்ற பொன்னேரியில் மருத்துவ கழிவுகள் சுகாதாரமற்ற முறையில் கொட்டப்பட்டுள்ளன. இதுகுறித்து தீக்கதிர் நாளிதழில் செய்தி வெளியானதை தொடர்ந்து அங்கிருந்து மருத்துவக் கழிவுகள் அகற்றப்பட்டு, ப்ளீச்சிங் பவுடர் போட்டு தூய்மைப்படுத்தினர். அதேசமயம் ஜெயங்கொண்டம் சுற்று வட்டார பகுதிகளில் டாக்டர் மாரிமுத்து தலைமையிலான குழுவினர் சம்பந்தப்பட்ட இடங்களில் மருத்துவம் படிக்காமல் ஹோமியோபதி படித்துவிட்டு அலோபதி மருத்துவம் பார்க்கின்றார்களா? மருத்து வமே படிக்காமல் எவரேனும் பொது மக்களுக்கு மருத்துவம் செய்கிறார்களா? என்பது குறித்து சின்னவளையம் பெரியவளையம் பகுதிகளில் சோதனை யில் ஈடுபட்டனர். அப்போது சின்னவளை யம் கிராமம் தோப்புத் தெருவை சேர்ந்த பத்மநாபன் (58), அதே பகுதி கீழத்தெரு வைச் சேர்ந்த பாண்டியன் (61), பெரிய வளையம் கிராமம் தெற்கு தெருவை சேர்ந்த தமிழ்ச்செல்வன் (39) ஆகியோர் தங்களது வீடுகளில் போலி மருத்து வர்களாக செயல்பட்டு ஆங்கில மருத்துவ சிகிச்சை அளித்து வருவது தெரியவந்தது. இதுகுறித்து டாக்டர் மாரிமுத்து ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் ராமராஜன் தலைமையிலான போலீசார் சின்னவளையம் பகுதியைச் சேர்ந்த பத்மநாபன் மற்றும் பாண்டியன் மற்றும் பெரியவளையம் கிராமத்தைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் ஆகியோரது வீட்டில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்த மருந்து மாத்தி ரைகள் உள்ளிட்ட உபகரணங்களை பறிமுதல் செய்து அவர்கள் 3 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர். போலி மருத்துவர்களுக்கு மருந்து சப்ளை செய்தது யார்? என்பது குறித்தும் அந்த மருந்து கடை உரிமையாளர்களிடம் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் ஜெயங்கொண்டம் பகுதி யில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.