districts

img

அங்கன்வாடி ஊழியர்-உதவியாளர் சங்க பேரவை

மயிலாடுதுறை, ஜூலை 10- தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர் சங்கத்தின் மயிலாடுதுறை ஒன்றிய பேரவை   ஒன்றிய தலைவர்  சுகுணா தலைமையில் நடைபெற்றது. பாலாம்பிகை வரவேற்றார்.  மாவட்ட தலைவர்  வி.பேபி துவக்கி வைத்து உரை யாற்றினார். ஐசிடிஎஸ் மாவட்ட துணைத் தலைவர் சகிலாபானு,நீலாவத், வள்ளி மற்றும்  சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் எம்.சேகர்,மாவட்ட பொரு ளாளர் ஆர்.ராமானுஜம், மாவட்ட தலைவர்  எம்.கலைச்செல்வன், மாவட்ட செயலாளர்  ப.மாரியப்பன்  ஆகியோர்  வாழ்த்திப் பேசினர். பேரவையில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.  தலைவராக  செ.செல்வி,செயலாளராக சுஜாதா, பொருளாளராக ராணி எலிசபெத்  உள்ளிட்ட நிர்வாகிகள் அடங்கிய 17 பேர் கொண்ட ஒன்றி யக்குழு தேர்வு செய்யப்பட்டது,  ஐசிடிஎஸ் மாவட்ட செயலாளர் சி.லதா  நிறைவுரையாற்றினர்.  சுஜாதா நன்றி கூறினார்.