மயிலாடுதுறை, டிச.21 - மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் அருகேயுள்ள திருமெய்ஞானம் கிராமத்தில் ஆடுகளை வளர்க்கும் கூடாரம் போன்றே இயங்கும் உதவி பெறும் தொடக்கப் பள்ளிக்கு தரமான கட்டிடத்தை கட்டித் தந்து சின்னஞ்சிறு குழந்தைகளை பாதுகாக்க வேண்டுமென இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. திருமெய்ஞானம் கிராமத்திலுள்ள 1958-ல் அமைக்கப்பட்ட அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் சுற்றியுள்ள கிராமங்க ளான வடக்குத்தெரு, தெற்குத்தெரு, அம்புப்போட்ட சாலை, மேட்டுத் தெரு, ஜெயப்புரம், கீழத்தெரு, பிள்ளைப் பெருமா நல்லூர், நடுத்தெரு உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த ஏழை, எளிய குடும்பங்களை சேர்ந்த 110 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்ற னர். பள்ளிக்கட்டி டத்திற்குரிய எந்தவொரு அம்சங்களும் இல்லாமல் ஆடு, மாடுகளுக் காக அமைக்கப்பட்டது போல சிமெண்ட் கொட்டகையிலேயே தொடர்ந்து அப்பள்ளி இயங்கி வருகிறது. கழிப்பறை வசதி முறை யாக இல்லை. மாணவர்களுக்கும், ஆசிரி யர்களுக்கும் ஒரே ஒரு சிறிய அறையிலான கழிப்பறை மட்டுமே இருக்கிறது.
பள்ளி வளா கத்தை சுற்றி பாதுகாப்பான சுவர் இல்லா மல் வெறும் வேலி மட்டுமே உள்ளதால் பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் நாள்தோறும் பள்ளிக்குள் வந்து செல்வது வாடிக்கையாகி விட்டது. மழைக்காலங்களில் மழைநீர் முழுவதும் வகுப்பறைக்குள் புகுந்து பள்ளிக் குழந்தை கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகிறது. சேத மடைந்து காணப்படும் பள்ளிக்கு புதிய கட்டிட மும், அடிப்படை வசதிகளையும் முறையாக செய்து தர வேண்டுமென இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தரங்கம்பாடி ஒன்றியச் செயலாளர் ஐயப்பன் வலியுறுத்தியுள்ளார். நெல்லையில் தனியார் பள்ளிக் கட்டிட சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் பரிதாப மாக உயிரிழந்த பிறகு ஒவ்வொரு மாவட்டத்தி லும் அதிகாரிகள் பள்ளிக் கட்டிடங்களை ஆய்வு செய்து வருகின்றனர். தரங்கம்பாடி பகுதி களில் இதுவரை எந்தவொரு ஆய்வுகளும் நடந்ததாக தெரியவில்லை. ஏராளமான அரசுப் பள்ளிகள், உதவிபெ றும் பள்ளி கட்டிடங்கள் இப்பகுதிகளில் மிகவும் சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளதை சீரமைக்க வேண்டுமென தொ டர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறோம். ஆனால் எந்த அதிகாரிகளும் கண்டுகொள்வ தில்லை. தரங்கம்பாடி வட்டத்தில் உள்ள ஆபத்தான பள்ளிக் கட்டிடங்களை சீரமைக்க வேண்டுமென்றும் தாமதித்தால் விரைவில் போராட்டங்களை நடத்துவோம் என்றும் ஐயப்பன் தெரிவித்துள்ளார்.