திருச்சிராப்பள்ளி, ஜூன், 20- மலேசிய தலைநகர் கோலாலம்பூரிலிருந்து திருச்சி பன்னாட்டு விமான நிலையத்துக்கு, ஏர் ஏசியா விமானம் வந்தடைந்தது. அதில் வந்த பயணிகளின் பயண ஆவணங்களை குடி யேற்றப்பிரிவினர் வழக்க மான சோதனைகளுக்கு உள்ளாக்கினர்.
இதில், அரிய லூர் மாவட்டம் உடையார் பாளையம் அருகேயுள்ள உள்ளியக்குடி, கோரைக் குடி பகுதியைச் சேர்ந்த மணி மொழி (51) என்பவரின் கடவுச்சீட்டு உள்ளிட்ட பயண ஆவணங்களை சோதனை மேற்கொண்டனர். அப்போது, அவர் மலே சியா செல்லும் முன்பு, போலி ஆவணங்களைக் கொண்டு முறைகேடு செய்து, கடவுச் சீட்டில் மணி என அவரது பெயரை மாற்றம் செய்து, பிறந்த தேதியையும் மாற்றி பயணித்தது தெரியவந்தது. இதனையடுத்து அவரை போலீஸாரிடம் ஒப்ப டைத்தனர்.
இது தொடர்பாக திருச்சி விமான நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து மணிமொழியை புதன்கிழமை கைது செய்த னர்.இதேபோல் போலி பாஸ்போர்ட்டில் வந்த தெலுங்கானா மாநிலம் ருத்ரவரம் பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் குந் தாலி என்பவர் திருச்சியில் இருந்து மலேசியா செல்ல முயன்றார். அப்போது திருச்சி விமான நிலை யத்தில் இமிகிரேஷன் அதி காரிகள் அவரது பாஸ்போர் ட்டை சோதனையிட்டனர். பாஸ்போர்ட்டில் முறைகேடு செய்து பயணிக்க இருந்தது தெரியவந்தது. உடனே அதிகாரிகள் ஏர்போர்ட் காவல் நிலையத்தில் அவரை ஒப்படைத்தனர். அவரையும் விமான நிலைய போலீசார் வழக்கு பதிந்து கைது செய்தனர்.