districts

போதையிலிருந்து இளைஞர்களை மீட்க டிச.10 திருவாரூரில் மினி மாரத்தான் போட்டி

குடவாசல், டிச. 8 - இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் திருவாரூர் மாவட்ட ஒன்றிய பேரவை கடந்த  டிசம்பர் 4 ஆம் தேதி முதல் குடவாசல், வலங்கைமான், நன்னிலம் ஆகிய ஒன்றியங் களில் தொடர்ந்து நடைபெற்றது.  கூட்டத்தில், டிசம்பர் 10 ஆம் தேதி போதை  கலாச்சாரத்தில் இளைஞர்கள், மாண வர்களை பாதுகாத்திட ‘போதை வேண்டாம் -  கல்வி, வேலை, சுகாதாரம் வேண்டும்’ என  வலியுறுத்தி  திருவாரூர் விளமல் கல்பாலத் தில் இருந்து பழைய பேருந்து நிலையத்தில் உள்ள பெரியார் சிலை வரை நடைபெற உள்ள மினி மாரத்தான் போட்டியை மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலை மைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் துவக்கி வைக்கிறார்.  மாவட்ட தலைவர் எஸ்.எம்.சலாவுதீன், மாவட்ட செயலாளர் கே.பி.ஜோதிபாசு ஆகி யோர் சங்கத்தின் நோக்கம் மற்றும் வாலிபர்  சங்கத்தின் அரசியல் பங்கேற்பு, மக்களின் அத்தியாவசிய தேவைகளை அரசின் கவனத் துக்கு கொண்டு செல்லும் வகையில் கள போராட்டங்களில் ஈடுபடுவது குறித்து சிறப்பு ரையாற்றினர்.  குடவாசலில் நடைபெற்ற பேரவையில் குடவாசல் தெற்கு பகுதி ஒன்றிய தலைவ ராக பி.குமரேசன், செயலாளராக கா. பகத்சிங், பொருளாளராக பா.பகத்சிங் ஆகி யோர் தேர்வு செய்யப்பட்டனர். வலங்கை மான் ஒன்றியத்தில் தலைவராக பி.விஜய்,  செயலாளராக ஜெ.ஜெயராஜ், பொருளாள ராக சந்திரசேகரன் ஆகியோரும், நன்னி லம் ஒன்றியத்தில் தலைவராக பி.ஜெயசீலன்,  செயலாளராக எஸ்.சுரேந்தர், பொருளாள ராக கே.எம்.பாலா ஆகியோரும் தேர்வு செய் யப்பட்டனர்.