districts

img

சிப்காட் அமைக்கும் பணிக்கு விளைநிலங்களை கையகப்படுத்த விவசாயிகள் எதிர்ப்பு

தருமபுரியில் சிப்காட் அமைக்கும் பணிக்கு விவசாய விளைநிலங்களை கையகப்படுத்திக் கூடாது என வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள்‌ சங்கம் சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்றது.

தருமபுயில் சிப்காட் வளாகம் அமைப்பதற்காக அதகப்பாடி, தடங்கம், அதியமான் கோட்டை, பாலஜங்கமன அள்ளி ஆகிய இடங்களில் 1183.05 ஏக்கர் புறம்போக்கு நிலங்கள், 550.35 ஏக்கர் பட்டா நிலங்கள் என மொத்தம் 1733.40 ஏக்கர் நிலங்கள் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டது.

இந்நிலையில், நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் தருமபுரியில் சிப்காட் அமைப்பதற்கு மேலும் 1000 ஏக்கர் நிலம் எடுக்கப்படும் என முதல்வர் அறிவித்தார்.

இதன் அடிப்படையில் சிப்காட் தொழில்துறை ஆணைய துணை தலைவர் நீரஜ்மிட்டல் நிலம் கையகப்படுத்துவதற்கான இடத்தை பார்வையிட்டனர்.

தருமபுரி அருகே உள்ள ஜீவாநகர், ஜாகிர், அதியமான்கோட்டை பாலஜங்கமன அள்ளி ஆகிய பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களை கையகப்படுத்துவதற்கான முயற்சிகள் நடைபெற்றுவருகிறது.

சிப்காட் அமைக்க தேர்வு செய்யும் இடத்தில் வீடுகள் ,கிணறு தென்னை வாழை ,நெல், கேழ்வரகு ,மஞ்சள் உள்ளிட்ட பணப்பயிற்கள் விளையும்  நிலமாக உள்ளது .

இந்த நிலத்தை சிப்காட் அமைப்பதற்காக எடுத்துக் கொண்டால் இந்த நான்கு கிராம மக்களின் வாழ்வு அழிக்கப்படும்.

எனவே விளைநிலங்களை கையகப்படுத்த கூடாது என வலியுறுத்தி டிசம்பர் 24 அன்று  தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் பாதிக்கப்படும் விவசாயிகள் தங்கள் விவசாய நிலத்தில் விளையும் பயிகளனான நெல் ,கரும்பு ,மஞ்சள்,துவரை,வாழை ஆகிய பயிர்களுடன் வந்து மனுகொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் கே.என்.மல்லையன் தலைமை வகித்தார்.

மாநில துணைத்தலைவர் டி.ரவீந்திரன், விவசாயிகள் சங்க மாவட்ட நிர்வாகிகள் பி.இளம்பரிதி அன்பு ,பி.ஜெயராமன்,இ.பி.பெருமாள், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்க மாவட்டசெயலாளர் ஆர்.சின்னசாமி ஆகியோர் பேசினர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸட் கட்சியின் நல்லம்பள்ளி ஒன்றியசெயலாளர் எஸ்.எஸ்.சின்னராஜ் ,மாவட்டககுழு உறுப்பினர்கள் கே.குப்புசாமி கே.எல்லப்பன் ஆகியோர் வாழ்த்திபேசினர்.

போராட்டத்தின் முடிவில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சமூகநலத் திட்டம்) சாந்தியிடம் விவசாயிகள் சங்க தலைவர்கள், விவசாயிகள் மனுகொடுத்தனர்.

;