districts

img

சென்னை சிபிஎம் மாநிலக் குழு அலுவலகம் கட்ட நிதி வழங்கல்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தஞ்சாவூர் மாவட்டக் குழு அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சிபிஎம் தஞ்சை ஒன்றியம் சார்பில், சென்னை மாநிலக் குழு அலுவலகமான பி.ஆர். நினைவகம் கட்டட நிதிக்கு முதல் கட்டமாக ரூ.11 ஆயிரத்தை, தஞ்சை ஒன்றியச் செயலாளர் கே.அபிமன்னன், மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியனிடம் வழங்கினார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் பி.செந்தில்குமார், மாவட்டக் குழு உறுப்பினர் பி.எம்.இளங்கோவன், ஒன்றியக் குழு உறுப்பினர்கள், மாதர் சங்க ஒன்றியத் தலைவர் சரிதா, விவசாயிகள் சங்கம் ஞானமாணிக்கம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.