தஞ்சாவூர், அக்.27- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள முடச்சிக்காடு கலைஞர் நகர் பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் மைதீன் பாஷா (45). கூலித் தொழிலாளியான இவர், மண் சுவரால் கட்டப்பட்ட வீட்டில் தாய், மனைவி, குழந்தைகளுடன் வசித்து வந்தார். அண்மையில் பெய்த தொடர் மழை காரணமாக இவரது வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. இதையடுத்து, ஊராட்சி மன்றத் தலைவர் சக்கரவர்த்தி இவர்களை பள்ளிக் கட்டடத்தில் தங்க வைத்தார். இவருடைய நிலைகுறித்து அறிந்த பேராவூரணி லயன்ஸ் சங்க முன்னாள் தலைவர் தொழிலதிபர் ஏசியன் ஹெச். சம்சுதீன் ஏற்பாட்டில், லயன் சங்கம் சார்பில் ரூ.15 ஆயிரம் நிதி உதவி அளிக்கப்பட்டது. இதனை லயன்ஸ் சங்கத் தலைவர் செ.ராமநாதன், செயலாளர்கள் ஆதித்யன், பிரபு, பொருளாளர் பன்னீர் செல்வம் ஆகியோர் நேரில் சென்று வழங்கினர். இதேபோல், பேராவூரணி கோக்கனட் சிட்டி இன்ஸ்பயர் லயன்ஸ் சங்கம் சார்பில் தலைவர் எஸ்.பாண்டி யராஜன், பொருளாளர் சங்கர் ஜவான், மண்டல ஒருங்கிணைப்பாளர் வ.பாலசுப்பிரமணியன், மாவட்டத் தலைவர் நீலகண்டன், நிர்வாகிகள் பெஸ்ட் குமார் ஆகி யோர் அரிசி, பருப்பு, மளிகை, காய்கறி உள்ளிட்ட ரூ.5 ஆயி ரம் மதிப்பிலான பொருட்களை வழங்கினர்.