districts

img

பேராவூரணி உடற்கூராய்வு கூடத்தில் குளிர்சாதனப் பெட்டி இல்லாததால் அழுகும் சடலங்கள்

தஞ்சாவூர், செப்.24 -  தஞ்சாவூர் மாவட்டம் பேரா வூரணியில் பெருந்தலைவர் காம ராஜர் அரசு மருத்துவமனை கடந்த  50 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வருகிறது.  பேராவூரணி, சேதுபாவாசத்தி ரம், ரெட்டவயல் உள்ளிட்ட பேரா வூரணி ஒன்றியத்தைச் சேர்ந்த 75-க்கும் மேற்பட்ட ஊராட்சிகள் மற்றும் அருகில் உள்ள புதுக் கோட்டை மாவட்டத்தை சேர்ந்த, அணைவயல், கீரமங்கலம், மேற்ப னைக்காடு, ஆயங்குடி, கட்டுமா வடி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதி களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள், தினசரி பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக் காக வந்து செல்கின்றனர்.  இந்த மருத்துவமனையில் எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லை என்ற குற்றச்சாட்டு தொ டர்ந்து பொதுமக்களால் முன்வைக் கப்பட்டு வருகிறது. பேராவூரணி,  திருச்சிற்றம்பலம், சேதுபாவா சத்திரம், கடலோர காவல் படை உள்ளிட்ட காவல் நிலையங்களில் உள்ள கொலை, தற்கொலை, விபத்து ஆகியவற்றில் மீட்கப்படும் சடலங்கள் பேராவூரணி அரசு  மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக் காக அனுப்பி வைக்கப்படுகின்றன. அந்த வகையில், மாதம் ஒன்றுக்கு  20-க்கும் மேற்பட்ட சடலங்கள்  பேராவூரணி அரசு மருத்துவமனை யில் உடற்கூராய்வு பரிசோதனை செய்யப்படுகிறது.  இந்நிலையில் பேராவூரணி யிலுள்ள உடற்கூராய்வுக் கூடம் எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாமல் இருப்பது பெரும் கவ லையை ஏற்படுத்தியுள்ளது. இங்குள்ள உடற்கூராய்வுக் கூடத் தில் ஜன்னலுக்கு கண்ணாடிகள் இல்லாத நிலையில், பெருச்சாளி கள் தொல்லை இருப்பதாக கூறப் படுகிறது. அருகிலேயே குடியிருப்பு பகுதிகளும் உள்ளன.

 மேலும் மாலை நேரங்களில், மருத்துவர்கள் இல்லாததால் சடலங் களை மறுநாள் உடற்கூராய்வு செய்ய  வேண்டிய சூழலில் உடலை பாது காத்து வைக்க குளிர்சாதன பெட்டி யும் இல்லை. இதன் காரணமாக கொண்டு வரப்பட்டுள்ள சடலம் அழுகி துர்நாற்றம் வீசும் நிலை உள்ளது. மேலும் பெருச்சாளிகள் உடலைக் கடித்து குதறி வைப்பது டன், உடல் பாகங்கள், தசைகளை சாலையில் இழுத்து வந்து போட்டுச்  செல்கின்றன.  விபத்துகளில் உடல் சிதைந்த நிலையில் கொண்டு வரப்படும் சட லங்கள், குளிர் சாதனப் பெட்டியில் பாதுகாக்கப்படாமல், துர்நாற்றம் வீசுவதால் அக்கம் பக்கத்தில் குடி யிருப்பவர்கள் அங்கு வசிக்க முடி யாத நிலையில், நோய்த் தொற்றுக்கு  ஆளாக வாய்ப்பு உள்ளது. இந்நிலையில் பேராவூரணி அருகே உள்ள பாடுவான்கொல்லை கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி செந்தாமரை (37) என்ப வர் குடும்பப் பிரச்சனை காரணமாக வியாழக்கிழமை இரவு தற்கொலை செய்து கொண்டார். அவரது சட லத்தை சேதுபாவாசத்திரம் காவல் துறையினர் வெள்ளிக்கிழமை மீட்டு, பகல் 1 மணிக்கு பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்துள்ளனர்.  உடற்கூராய்வு கூடத்தை திறக்க வும், அங்கு உடலை வைக்கவும் உரிய ஏற்பாடுகள் இல்லாததாலும், காவல்துறையினர் வர தாமதம் ஆனதாலும், சடலம் ஆம்புலன்ஸ் வண்டியிலேயே மாலை 5 மணி வரை காத்திருக்கும் நிலை ஏற்பட் டது. பின்னர் சடலத்தை உடற் கூராய்வு கூடத்திற்கு கொண்டு செல்லும் போது, அங்கு குளிர்சாத னப் பெட்டி வசதி இல்லை. இதனால்,  ஏற்கனவே இறந்து ஒரு நாளை கடந்த நிலையில், உடல் அழுகி துர்நாற்றம் வீச தொடங்கியது.

மேலும் அங்கு பெருச்சாளிகள் நட மாட்டம் இருந்துள்ளது.  இதனைக் கண்ட இறந்து போன செந்தாமரையின் உறவினர்கள் கடும்  எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர்  வேறு வழியின்றி, தனியாரிட மிருந்து குளிர்சாதன பெட்டியை வாடகைக்கு எடுத்து வந்துள்ளனர். அதன் பிறகு செந்தாமரையின் உடல் அதில் வைத்து பாதுகாக்கப்பட்டது.  இதுமட்டுமின்றி, ஏழ்மை நிலை யில் உள்ள செந்தாமரை குடும்பத்தி னரிடம் குளிர்சாதனப் பெட்டிக்கான கட்டணம் ரூ.2 ஆயிரம் வாங்கி யுள்ளனர்.  எனவே தமிழக அரசும், மாவட்ட  நிர்வாகம், சுகாதாரத் துறையும்  உரிய நடவடிக்கை எடுத்து தாலுகா  அளவிலான இந்த மருத்துவ மனையை தரம் உயர்த்தவும், போதிய மருத்துவர்கள் மருத்துவ உபகரணங்கள், அரசு மருத்துவம னைக்கு வேண்டிய வசதிகளை செய்யவும், உடற்கூராய்வு கூடத்தை நவீனப்படுத்தி, குளிர்சாதன பெட்டி களுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்  என இப்பகுதி மக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

;