கும்பகோணம், அக்.5- அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் தஞ்சாவூர் மாவட்டம் திருவி டைமருதூர் தெற்கு ஒன்றிய 7வது மாநாடு பருத்திச்சேரி கிராமத்தில் நடைபெற்றது. மாநாட்டிற்கு ஒன்றியத் தலைவர் தருமையன் தலைமை வகித்தார். மாநாட்டை மாநிலக் குழு உறுப்பினர் சி.நாகராஜன் துவக்கி வைத்து பேசினார். மாவட் டச் செயலாளர் கே.பக்கிரி சாமி சிறப்புரையாற்றினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திருவிடைமருதூர் தெற்கு ஒன்றிய செயலாளர் பழனிவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். திருவிடைமருதூர் தெற்கு ஒன்றியத்தில் அனை வருக்கும் நூறு நாள் வேலையை பாகுபாடின்றி வழங்க வேண்டும். காலை யில் 7 மணிக்கு வர வேண்டும் என்ற நிபந்தனையை நிறுத்த வேண்டும். ரேசன் கடை யில் தகுதியுள்ள அனைவ ருக்கும் 35 கிலோ அரிசியை இலவசமாக வழங்க வேண்டும். குடிமனை பட்டா இல்லாதவர்களுக்கு உடன டியாக குடிமனை பட்டா வழங்க வேண்டும். மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும். ஆரிய சேரி கிராமத்தில் இந்து குறவர்கள் குடியிருக்கும் பகுதிகளுக்கு, போக்கு வரத்திற்கான பாதை அமைத்து சாலை அமைக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. மாநாட்டில் திருவிடை மருதூர் தெற்கு ஒன்றிய தலைவராக ரங்கசாமி, செய லாளராக சத்யராஜ், பொரு ளாளராக லெனின் பாரதி ஆகியோர் தேர்வு செய்யப் பட்டனர்.