சேலம், ஜூன் 11- குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கத்தின் பொன் விழாவை முன்னிட்டு, தபால் தலை வெளியிட்டப்பட்டது.
சேலம் மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கத்தின் பொன் விழா ஆண்டு நிறைவை முன்னிட்டு, பொன்விழா தபால் தலை வெளியிட்டு நிகழ்ச்சி, நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் ஜெ.மு.இமயவ ரம்பன் தலைமை வகித்தார். செயலாளர் முருகன் வர வேற்றார். பொன்விழா தபால் தலையின் முதல் வில்லையை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் இணைத் தலைவர் சரவணன் வெளியிட்டார். மூத்த வழக்கறிஞர்கள் வி.ஆர்.சந்திரசேகரன், ஜெயபால், ஜனார்த்தனன், சிவன், தமயந்தி ஆகியோர் பெற்றுக்கொண்டனர். இதில் பலர் கலந்து கொண்டனர். முடிவில், சங்கத்தின் பொருளாளர் கண்ணன் நன்றி கூறினார்.