districts

img

வொர்த் டிரஸ்ட் வைர விழா பயண வரலாறு புத்தகம் வெளியீடு

சென்னை,ஜன. 19- மாற்றுத்திறனாளிகளுக்கு திறன் அதிகாரத்தை வழங்கு வதில் முன்னோடியான வொர்த் டிரஸ்ட் 60 ஆண்டுகளை நிறைவு செய்து தனது வைர விழாவை கொண்டாடியது. மாற்றுத்திறனாளிகள் திறனதிகாரம் பெறச் செய்வ தற்கான பயண வரலாறு என்ற தலைப்பில் மாற்றுத்திறனா ளிகளின் உள்ளடக்கம், சுதந்திரம் மற்றும் திறனதிகாரம் பெறல் என்ற நோக்கங்களுக்கான அதன் உத்வேகமளிக்கும் பயணத்தை காலவரிசைப்படி பட்டியலிடும் ஒரு சிறப்பு புத்த கத்தை வைர விழா கொண்டாட்டத்தை குறிக்கும் வகையில் வெளியிடப்பட்டது. வொர்த் டிரஸ்ட்-ன் ஆதரவாளரும், முன்னாள் நிர்வாக இயக்குநருமான சி. அந்தோணிசாமி இப்புத்தகத்தை அறிமுகம் செய்து வெளியிட்டார். பிரபல பத்திரிக்கையாளரும் இசை வரலாற்று நிபுணருமான வி.ஶ்ரீராம் இந்நூலை எழுதியிருக்கிறார்.  முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இந்நூலுக்கு முன்னுரை வழங்கி சிறப்பித்திருக்கிறார். மாற்றுத்திறனாளிகளுக்கான மறுவாழ்வு, கல்வி, பயிற்சி, வேலைவாய்ப்பு மற்றும் திறனதிகாரம் பெறச் செய்வது ஆகியவற்றில் வொர்த் டிரஸ்ட் ஆற்றி வரும் அர்ப்பணிப்புமிக்க சேவையை  குறிப்பிட்டிருக்கும் அவர் தனது மனமார்ந்த பாராட்டு களையும், வாழ்த்தையும் தெரிவித்திருக்கிறார்.