மாற்றுத்திறனாளி சங்கம் மத்திய சென்னை மாவட்டம் அண்ணாநகர் பகுதி எம்எம்டிஏ காலனி சார்பில் உலக மாற்றுத்திறனாளிகள் தினம் மிக சிறப்பாக கொண்டாடபட்டது! இந்நிகழ்வில் பகுதி தலைவர் தேவசீலன் தலைமை தாங்கினார் பகுதி நிர்வாகி கல்பனா கொடியேற்றினார். மாவட்டச் செயலாளர் மனோன்மணி சிறப்புரையாற்றினார். மாவட்ட தலைவர் சுரேந்திரன், மாவட்ட துணைத்தலைவர் தி.சிவா, பகுதி செயலாளர் எம்.முத்துராஜன், கே.மகேந்திரவர்மன், கிளை பொறுப்பாளர் ஏ.கே.விஜயன் நிர்வாகி ஜோசப் துரைராஜ் எஸ்.சுந்தர்ராஜ் ஆகியோர் பங்கேற்றனர்!