districts

img

சாதி சான்று கேட்டு பழங்குடியின மக்கள் ஆர்ப்பாட்டம்

செய்யாறு, செப். 13- பழங்குடி மாணவர்க ளுக்கு சாதி சான்று கேட்டு தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம், காட்டு நாயக்கன் பழங்குடி மக்கள்  சங்கம் சார்பில் செய்யாறு  வருவாய் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்தில் பழங் குடியினர் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் மேளதாளத்துடன் நடனமாடி னர். மன்னர் காலத்தில் காட்டிற்கு வரும் அரசனை  டோலி வைத்து பழங்குடி யின மக்கள் தூக்கி செல் வார்கள் என்பதை நினைவு படுத்தும் வகையில் ஆர்ப் பாட்டத்தில் டோலி வைக்கப் பட்டது. இருளர், காட்டு நாயக் கன் பழங்குடி மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும், பழங்குடி மாணவர்களுக்கு இனச்  சான்று கேட்டு விண்ணப் பித்த அனைவருக்கும் சான்று வழங்க வேண்டும்,  கொடநகர் சோமசுந்தரம், கீழ்கொவளைவேடு தனுஷ் ஆகியோருக்கு பழங்குடி சான்று வழங்கி, கல்லூரி படிப்பை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட் டத்தில் வலியுறுத்தப்பட்டன. பின்னர் வருவாய் கோட் டாட்சியர் வினோத் குமாரிடம் மனு அளித்தனர். இதில் மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநிலப் பொதுச்  செயலாளர் இரா.சரவணன், மாவட்டச் செயலாளர் எம்.மாரிமுத்து, தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் பா.செல்வன், விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் டி.கே.வெங்கடேசன், காட்டு நாயக்கன் பழங்குடி மக்கள்  சங்கத்தின் பொதுச் செயலாளர் எ.அய்யனார், விஜயா, அப்துல் காதர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.