கடமலைக்குண்டு, டிச.7- தேனி மாவட்டம், கடமலை-மயிலை ஒன்றியத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக அனைத்து கிராமங்களிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக பாலூத்து கிராமத்தில் வீட்டுச் சுவர்கள் இடிந்து விழுந்தன. இதேபோல கடமலைக் குண்டு, தேவராஜ்நகர், மயி லாடும்பாறை,மூலக்கடை, வருசநாடு, கோம்பைத்தொழு, குமணன்தொழு, தண்டியக்குளம், வாலிப் பாறை உள்ளிட்ட கிராமங்களில் 15க்கும் மேற்பட்ட வீடுகள் மழையால் சேதமடைந்துள் ளன. மழையின் காரணமாக வாலிப் பாறை,சீலமுத்தையாபுரம், முருக் கோடை உள் ளிட்ட பகுதிகளில் ஏராள மான ஏக்கர் பரப்பளவில் பயிரி டப்பட்ட பயிர்கள் நீரில் மூழ்கின. எனவே சம்பந்தப்பட்ட வருவாய் துறையினர் மழையால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு உரிய நிவா ரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.