districts

img

அரசு பேருந்தை சிறைபிடித்த மாணவர்கள்

கள்ளக்குறிச்சி,ஜூலை 5-

    உளுந்தூர்பேட்டை அருகே கிராமத்திற்குள் வராத அரசு பேருந்தை பெற்றொருடன் பள்ளி மாண வர்கள் சிறைபிடித்து மாண வர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

     கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர் பேட்டை அருகே ஊ செல்லூர் கிராமத்தில் 1000-திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திலிருந்து 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் உளுந்தூர்பேட்டைக்கு சென்று கல்வி பயின்று செல்கின்றனர். தடம் எண் 35 அரசு நகரப் பேருந்தில் மாணவர்கள் பள்ளிக்குச் சென்று வந்தனர்.  

    இந்நிலையில் சில நாட்களாக அந்த பேருந்து ஊருக்கு செல்லவில்லை என கூறப்படுகிறது. இது குறித்து அந்த கிராம மக்கள் பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரி களிடம் தெரிவித்தும் எந்த நடவடிக்கை யும் எடுக்க வில்லை. இதனால் ஆத்திர மடைந்த ஊ செல்லூர் கிராம மக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் அரசு பேருந்தை சிறை பிடித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  

   தங்கள் கிராமத்திற்கு தனியாக அரசு நகரப் பேருந்து பள்ளி நேரத்தில் வந்து செல்ல வேண்டும் என்ற கோரிக்கையை வலி யுறுத்தினர். சம்பவ இடத்திற்கு வந்த உளுந்தூர் பேட்டை காவல்துறையினர் பள்ளி மாணவர்கள்- பெற்றோரிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது, ஒருவாரத் தில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த னர். இதனைத் தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது.