கடலூர் மாவட்டத்தில் தொடர் மழையின் காரணமாக கடந்த 10 நாட்களுக்கும் மேலாக மழைநீர் தேங்கி நிற்பதால் தூர்நாற்றம் வீசி வருகிறது. கொசு தொல்லை, சுகாதாரக் கேடுகள் அதிகரித்து வருவதால் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரி செம்மண்டலத்தில் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.