புதுச்சேரி, மே 15-
புதுவையில் கத்தரி வெயில் கடந்த 4ஆம் தேதி தொடங்கியது. வரும் 29ஆம் தேதி வரை கத்தரி நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி மற்றும் புயல் காரணமாக கத்திரி வெயில் தொடங்கிய முதல் நாளில் மழை கொட்டித்தீர்த்தது.
இதனால் வெப்பத்தின் தாக்கம் குறைந்து காணப்பட்டது. வங்கக் கடலில் நிலை கொண்ட மொக்கா புயல் காற்றின் ஈரப்பதம் குறைந்து, கடந்த 4 நாட்களாக புதுவையில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து அனல் காற்று வீசி வருகிறது. இதனால் சுற்றுலா தலங்கள் வெறிச்சோடிக் காணப்பட்டன,
வாகன ஓட்டிகள் கடும் அவதிப்படுகின்றனர். இரவிலும் புழுக்கம் அதிகமாக இருக்கிறது. கடந்த 13ஆம் தேதி 100.22 டிகிரி பதிவாகி இருந்த நிலையில் தொடர்ந்து வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது.