கோடைக்காலத்தில் மக்களின் தண்ணீர் தாகத்தை தீர்க்க ஞாயிறன்று (ஏப்.28) தரமணி பிள்ளையார் கோவில் பேருந்து நிறுத்தம் மற்றும் பாரதி நகர் பேருந்து நிறுத்தம் அருகே தோழர் லீலாவதி நினைவு தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் வேளச்சேரி பகுதி குழு சார்பில் அமைக்கப்பட்ட இந்த தண்ணீர் பந்தலை சங்கத்தின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் தீ.சந்துரு திறந்து வைத்து, மக்களுக்கு மோர் வழங்கினார்.