districts

சாலையில் திடீரென எரிந்த கார்

வேலூர், ஜூன் 13-

    ஆந்திர மாநிலம் அனந்தபூர் பகுதியை சேர்ந்தவர் தருண்குமார் (30). இவர் பெங்களூரில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்கிறார். செவ்வாய்க்கிழமை மதியம் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்காக சத்துவாச்சாரியில் உள்ள கடைக்கு தருண் காரில் சென்றார். வேலூர் ஆட்சியர் அலுவலகம் எதிரே சென்று கொண்டிருந்த போது, காரின் பின்புறத்தில் திடீரென புகை வந்தது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த  அவர் காரில் இருந்து இறங்கி வெளியே ஓடி வந்தார். அப்போது கண்ணிமைக்கும் நேரத்தில் கார் முழுவதும் தீப்பற்றி எரிந்தது.

  இதுகுறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வேலூர் தீயணைப்பு துறை வீரர்கள் கொழுந்து விட்டு எரிந்த தீயை அணைத்தனர். இருப்பினும் கார் முழுவதும் தீயில் எரிந்து கருகியது. இதுகுறித்து சத்துவாச்சாரி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.