சிதம்பரம், ஜூலை.13-
சிதம்பரம் அருகே அரசு உதவிப் பெறும் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு மாற்றுச் சான்று கேட்டு இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் போராட்டம் நடை பெற்றது.
கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே புதுப்பேட்டையில் உள்ள அரசு உதவிப் பெறும் நடு நிலைப் பள்ளியில் 8ஆம் வகுப்பு பயின்று தேர்ச்சி பெற்ற 25 மாணவர்கள் உயர்நிலைப் பள்ளியில் சேர்வதற்கு மாற்று சான்று வழங்க வில்லை.
தங்களது பிள்ளைக ளுக்கு மாற்றுச் சான்று கோரி ஒரு மாதத்திற்கு மேலாகத் தொடர்ந்து அந்தப் பள்ளிக்கு சென்று ஆசிரியர்களை சந்தித்தும் பெற்றோர் வலியுறுத்தியும் மாற்று சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்க வில்லை.
இந்தப் பள்ளியில் பணி யாற்றிய தலைமை ஆசி ரியர் கடந்த மே மாதத்துடன் பணி ஓய்வு பெற்று சென்று விட்டதால். பள்ளி நிர்வாகம் புதிய தலைமை ஆசிரியரை நியமிப்பதில் ஏற்பட்ட காலதாமதம் மற்றும் அலட்சியமே இதற்கு காரணமாகும். இதனால், இந்திய மாணவர் சங்கம் தலைமையில் வியா ழனன்று (ஜூலை 13) மாண வர்கள் மற்றும் பெற்றோர் ஒன்று திரண்டு பள்ளியை முற்றுகையிட்டு போராட் டத்தில் ஈடுபட்டனர்.
இந்த தகவலை அறிந்த பள்ளிக்கல்வித்துறை அதி காரிகள், கீரப்பாளையம் வட்டார அலுவலரும் சம்பவ இடத்திற்கு வந்த னர். அப்போது, மாண வர்களுக்கு மாற்று சான்றிதழ் வழங்க உரிய நட வடிக்கை எடுப்பதாக எழுத்து பூர்வமாக உறுதியளித்தனர். இதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனர்.
இந்தப் போராட்டத்தில் இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஆகாஷ், மார்க்சிஸ்ட் கட்சி யின் மாவட்டக்குழு உறுப்பி னர் வாஞ்சிநாதன், ஒன்றி யக்குழு உறுப்பினர் முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.