districts

சின்ன வெங்காயம் கிலோ ரூ.120

சென்னை,ஜூன் 2-

    கோயம்பேடு சந்தையில் சில்லறை விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.110-க்கு விற்கப்படுகிறது. வெளி சந்தையில் மற்றும் சில்லறை கடைகளில் ரூ.120 முதல் ரூ.130 வரை விற்பனை செய்யப்படுகிறது.

    தக்காளி விலையை தொடர்ந்து தற்போது காய்கறி மற்றும் சின்ன வெங்காயத்தின் விலையும் தாறுமாறாக உயர்ந்துள்ளது. காய்கறிகள் விலை கிலோ ரூ.50க்கும் கீழ் இருந்த நிலை யில் அனைத்து காய்கறிகளின் விலையும் தற்போது எகிறியுள்ளது. கோயம்பேடு, காய்கறி மார்க்கெட்டுக்கு ஞாயி றன்று 400 லாரிகளில் காய்கறிகள் விற்ப னைக்கு வந்திருந்தன. மொத்த மார்க்கெட்டில் பீன்ஸ் ஒரு கிலோ ரூ120-க்கும், அவரைக்காய் ஒரு கிலோ ரூ.70-க்கும், ஊட்டி கேரட் ரூ.70-க்கும், சின்ன வெங்காயம் ரூ.120-க்கும் விற்பனை ஆனது. பச்சை மிளகாய் ரூ.110-க்கும், உஜாலா கத்தரிக்காய்-ரூ.60-க்கும், முருங்கைக்காய் ரூ.60,வெண்டைக்காய் -ரூ.40, இஞ்சி ஒரு கிலோ ரூ.210-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.