districts

img

தமிழகத்தில் நடைபெறும் சாதி ஆணவக் படுகொலைகளைத் தடுக்க தனி சட்டம்

தமிழகத்தில் நடைபெறும் சாதி ஆணவக் படுகொலைகளைத் தடுக்க தனி சட்டம் இயற்ற வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.விஜயகாந்த் தலைமையில் திருவள்ளூர் மீரா திரையரங்கம் அருகே புதனன்று (டிச. 2) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டச் செயலாளர் எஸ்.தேவேந்திரன், மாவட்டத் தலைவர் டி.மதன், பொருளாளர் எஸ்.கலையரசன், மாவட்ட நிர்வாகிகள் ஜெய்கணேஷ், சரவணன், இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் மதன், சிபிஎம் வட்டக் குழு உறுப்பினர் ம.உதயநிலா உட்பட பலர் பேசினர்.