districts

img

உரிய ஆவணமின்றி பேருந்தில் எடுத்துவரப்பட்ட ரூ.10 லட்சம் பறிமுதல்

கடலூர்,மே16- கடலூர் ஆல்பேட்டை சோதனை சாவடியில் உரிய ஆவணமின்றி பேருந்தில் எடுத்துவரப்பட்ட ரூ.10 லட்சத்தை காவல்துறையினர்  பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கடலூர் மஞ்சக்குப்பம் ஆல்பேட்டையில் மதுவிலக்கு சோதனை சாவடியில் புதுச்சேரி யில் இருந்து கடலூர் நோக்கி ஒரு தனியார் பேருந்து வந்து கொண்டிருந்தது.  அப்பொழுது வாகனத்தை நிறுத்திய காவல்துறையினர் சோதனை செய்தனர். அதில் வாலிபர் ஒருவரின் பையை சோதனை செய்து பார்த்தபோது அதில் ரூ.10 லட்சம் ரொக்கம் இருந்தது. ஆனால் அதற்கான உரிய ஆவணங்கள் அவரிடம் இல்லை. இதனால் அந்த வாலிபரையும் பையையும் கடலூர் புதுநகர் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.  போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் சென்னையை சேர்ந்த ராஜா (27) என தெரியவந்தது. அப்போது ராஜா  காவல்துறையினரிடம் கூறுகையில் தனக்கு வேண்டப்பட்ட அப்துல் ரசாக் என்பவர் மஞ்சக்குப்பத்தில் வீடு கட்டி வருவதாகவும், அவருக்கு கொடுப்பதற்காக பணத்தை எடுத்து வந்ததாகவும் கூறினார். இதன் பின்னர் போலீசார் 10 லட்சம் பணத்தை வருமானவரித்துறையிடம் ஒப்படைத்தனர். வருமானவரித் துறையினர் அந்த பணம் குறித்து ராஜாவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

;