தந்தை பெரியாரின் 145 ஆம் ஆண்டு பிறந்த தினத்தையொட்டி புதுச்சேரி பிள்ளைத் தோட்டத்தில் அமைந்துள்ள அவரது சிலைக்கு அரசு சார்பில் பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் பாஸ்கர் (எ) தட்சிணாமூர்த்தி, ரமேஷ் மற்றும் முற்போக்கு திராவிட இயக்கங்களை சேர்ந்த தலைவர்கள் பெரியாருக்கு மரியாதை செலுத்தினர்.