districts

img

டாஸ்மாக் கடையை அகற்றுக பொதுமேலாளரிடம் கவுன்சிலர் கோரிக்கை

சென்னை, ஜூன் 14 - அயனாவரம் மார்க்கெட் பள்ளி அருகில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என்று 98வது வார்டு கவுன்சிலர் வலியுறுத்தி உள்ளார்.

கொன்னூர் நெடுஞ்சாலை மார்க்கெட் பள்ளி அருகே, அயன்புரம் மார்க்கெட், ஜாயின்ட் ஆபிஸ் சந்திப்பில் டாஸ்மாக் கடை உள்ளது. கடையில் எப்போதும் கூட்டம் இருப்பதால், சாலையில் மாணவர்கள் சென்று வரவும், வாக னங்கள் திரும்பி செல்லவும் மிகவும் சிரமப்பட வேண்டி உள்ளது.

எனவே, இந்த கடையை அகற்ற வலியுறுத்தி கடந்த 9ந் தேதி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாண வர் சங்கம் சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து வெள்ளியன்று (ஜூன் 14) டாஸ்மாக் பொதுமேலாளரை சந்தித்து 98 வது வார்டு உறுப்பினர் ஆ.பிரியதர்ஷினி அளித்தார். இந்நிகழ்வின்போது மாணவர் சங்கத்தின் மத்திய சென்னை மாவட்டத் தலைவர் வே.அருண்குமார், வாலிபர் சங்கத்தின் வில்லிவாக்கம் பகுதி தலைவர் டேவிட், மாவட்டக் குழு உறுப்பினர் நிகில் ஆகியோர் உடனிருந்தனர்.