districts

img

வள்ளலார் பேருந்து நிலையத்தை நவீனப்படுத்தவேண்டும்

சென்னை, அக். 13- வள்ளலார் பேருந்து நிலை யத்தில் கழிப்பறை, இருக்கை கள், மேற்கூரை அமைக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சி ராயபுரம் பகுதி மாநாடு வலியுறுத்தியுள்ளது. ராயபுரம் பகுதி 16ஆவது மாநாடு ஆண்டியப்ப கிராமணி தெருவில் தோழர்கள் என்.சங்கரய்யா, சு.லெனின் சுந்தர் நினைவரங்கில் பகுதிக்குழு உறுப்பினர் டி.வெங்கட் தலைமையில் ஞாயிறன்று (அக். 13) நடைபெற்றது. மூத்த உறுப்பினர் எஸ்.தேவராயன் கட்சிக் கொடியை ஏற்றினார். பகுதிக்குழு உறுப்பினர் ச.முருகேசன் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.கே.மகேந்திரன் மாநாட்டை துவக்கி வைத்தார். பகுதிச் செயலாளர் எஸ்.பவானி வேலை அறிக்கையையும், பகுதிக்குழு உறுப்பினர் ஜி.முனுசாமி வரவு-செலவு அறிக்கையையும் சமர்ப்பித்தனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.ஜெயராமன் மாநாட்டை வாழ்த்தியும் ஆர்.லோகநாதன் நிறைவு செய்தும் பேசினர். முன்னதாக என்.ராஜேஷ் வரவேற்றார். ஜா.ஆபித்துன்னிசா நன்றி கூறினார். தீர்மானங்கள்  சாலையோர வியாபாரிகளை முன்னறிவிப்பு இன்றி அகற்றக்கூடாது , எம்.சி.ரோடு - ஜி.ஏ.ரோட்டில் உள்ள 200க்கும் மேற்பட்ட சாலையோர சிறுகடை வியா பாரிகளுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும், போஜ ராஜன் நகர்  ரயில்வே நிலத்தில் வசிக்கும் மக்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும், அங்கு நடைபெறும் சுரங்கப்பாதை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும், போஜ ராஜன் நகர், சீனிவாசபுரம் பகுதிகளில் 5 தலைமுறைகளாக வசிக்கும் மக்களுக்கு இலவச குடிமனைப்பட்டா வழங்க வேண்டும், கிழக்கு கல்லறை சாலையில் உள்ள அடுக்கு மாடி   குடியிருப்பு கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க வேண்டும், உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. பகுதிக்குழுதேர்வு 9 பேர் கொண்ட பகுதி குழுவின் செயலாளராக எஸ்.பவானி தேர்வு செய்யப்பட்டார்.