districts

ஜூலை 24 ல் மாவட்ட தலைநகரங்களில் பேரணி அரசு ஊழியர் சங்க எழுச்சி நாளில் தீர்மானம்

செங்கல்பட்டு, ஜூலை 3-

    தேர்தல் கால  வாக்குறுதி களை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி யும் முதல்வரின் கவனத்தை  ஈர்த்தும்  மாவட்ட தலை நகரங்களில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் பேரணி நடைபெற உள்ளது.

    தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் எழுச்சி நாள் கூட்டம் மற்றும் மாணிக்க ஆண்டு கொடியேற்று விழா   மாநில தலைவர் மு.அன்பரசு  தலைமையில் செங்கல் பட்டில் நடைபெற்றது. சங்கத்தின் மாநில துணைப் பொதுச் செயலாளர் தெ.வாசுகி வரவேற்றார்.  இக்கூட்டத்தில் 2003ல் அடக்குமுறைகளை எதிர் கொண்டதும் எதிர்கால சவால்களும் என்ற தலைப் பில்  மாநில பொதுச் செயலா ளர் ஆ.செல்வம் பேசினார்.  கோரிக்கைகளை விளக்கி முன்னாள் மாநிலத் தலை வர் இல.சீதரன், முன்னாள் மாநில பொதுச் செயலாளர் அ.இராஜாபாதர், முன்னாள் மாநிலப் பொருளா ளர்கள் என்.இளங்கோ,   வி.தேவன், வே.கணபதி, எம்.தங்கராசு,  தலைமை செயலக சங்க தலைவர் கு.வெங்கடேசன் உள்ளிட்ட பலர் பேசினர்.

    தமிழ்நாடு அரசு தேர்கால வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் தமிழ்நாடு முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஜூலை  11ம் தேதியன்று  மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப் பாட்டம் நடத்துவது, அதே  கோரிக்கைகளை வலி யுறுத்தி வருகிற 24ம் தேதி யன்று மாவட்ட தலை நகரங்களில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் பெருந்திரள் பேரணி நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தை நிறைவு செய்தும் ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் கொள் கைகளும், உழைக்கும் வர்க்கம் சந்திக்கும் சவால்களும் என்ற தலைப்பில் சிஐடியு மாநில தலைவர் அ.சவுந்தரராசன் சிறப்புரையாற்றினார். மாநிலப் பொருளாளர் மு.பாஸ்கரன் நன்றி கூறினார்.