districts

img

பழங்குடி இன மக்களின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றிய கோட்டாட்சியர்

திருவள்ளூர், ஜன 21- பட்டாபி ராமபுரம் சத்யா நகரில் குடியிருக்கும் பழங்குடி இன மக்களுக்கு தொகுப்பு வீடுகள் கட்டு வதற்கான பணி ஆணை வழங்கும் நிகழ்ச்சி வெள்ளி யன்று (ஜன-21) நடை பெற்றது. திருத்தணி அருகில் உள்ள  பட்டாபி ராமபுரம் ஆற்றங்கரை ஓரமாக 50க்கும் மேற்பட்ட இருளர் இன மக்கள் கடந்த 40ஆண்டு களுக்கு மேலாக வசித்து வந்தனர். மழைக்காலத்தில் அங்த பகுதிக்கு யாரும் சென்று வர முடியாத அள விற்கு  சேறும் சகதியுமாக காட்சி அளித்து வந்தது.  குடிநீர், சாலை வசதி   உள்ளிட்ட அடிப்படை தேவைகள் கூட இம்மக்க ளுக்கு எட்டாக்கனியாகவே இருந்தது. இந்நிலையில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் சார்பில் குடிமனை பட்டா கேட்டு பலகட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டது. இந்த மக்களின் புலம்பலை எந்த அரசு அதிகாரிகளும் செவிசாய்க்காத போது  திருத்தணி கோட்டாட்சியர் சத்யா என்பவர் பொறுப் பேற்றவுடன் பழங்குடியின மக்களை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தினார். இதன் பயனாக 20 குடும்பங்க ளுக்கு குடிமனை பட்டா வழங்கினார். குடிநீருக்காக கைபம்பு ஒன்றை அமைத்து கொடுத்ததோடு  தொகுப்பு வீடுகள் கட்ட பணி ஆணையும் வழங்கினார். பழங்குடி இன மக்களின் கோரிக்கைகளை நிறைவேற் றிய  கோட்டாட்சியர் சத்யா வின் பெயரை தாங்கள் குடியிருப்பிற்கு அம்மக்கள் சூட்டியுள்ளனர். வெள்ளி யன்று  பழங்குடி மக்களுக்கு  தொகுப்பு  வீடு கட்டுவதற் கான ஆணையை வழங்கி திருத்தணி கோட்டாட்சி யர் சத்யா  சிறப்புரையாற்றி னார். திருத்தணி வட்டாட்சியர் ஜெயராணி, தனி வட்டாட்சியர்கள் சாந்தி,  தேவி, கிராம நிர்வாக அலுவ லர் கிரண், ஊராட்சி மன்ற தலைவர் தேவி பாஸ்கர், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஜி.சின்னதுரை, மாவட்டச் செயலாளர் ஆர்.தமிழ் அரசு, மாவட்ட துணைத் தலைவர் வி.அந்தோணி, சிறுபான்மை மக்கள் நல சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஏ.அப்சல்அகமது, வாலிபர்  சங்கத்தின் பகுதி செயலா ளர் பாலாஜி  ஆகியோர் கலந்து கொண்டனர். பட்டாபிராமபுரம் மட்டு மல்லாமல் திருத்தணி கோட்டத்திற்கு உட்பட்ட வி.கே.என் கண்டிகை, அகூர், செருக்கனூர், வீரகநல்லூர், காவேரிராஜபுரம் உள்ளிட்டு 17 கிராமங்களில் உள்ள பழங்குடியினர்  316 குடும்பங் களுக்கு  ஆர்டி ஓசத்யா குடிமனை பட்டா வழங்கி உள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.