பேரண்டூர் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் வயிற்று போக்கால் பாதிக்கப்பட்டு, திருவள்ளூர் அரசு மருத்துவமனை, மருத்துவக் கல்லூரி மற்றும் ஊத்துக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களை ஞாயிறன்று (டிச 5) அமைச்சர் சா.மு.நாசர், மாவட்ட ஆட்சித் தலைவர் ஆல்பி ஜான் வர்கீஸ் ஆகியோர் நேரில் பார்வையிட்டு பிஸ்கட், பழங்கள் போர்வை உள்ளிட்ட நிவாரண உதவிகளை வழங்கி ஆறுதல் கூறினர்.