திருவண்ணாமலை, ஜுலை 2-
கைத்தறி நெசவுத் தொழிலை பாதிக்கும் விசைத்தறி தொழில்நுட்பத்தை தடுக்க வேண்டும் என ஆரணியில் நடைபெற்ற தொழிலாளர் கூட்டமைப்பு ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம். அருண கிரி சத்திரம் அருகே , ஆரணி பட்டு கைத்தறி தொழிலாளர்கள் கூட்டமைப்பு சார்பில் ஆலோ சனை கூட்டம் ஞாயிறன்று நடைபெற்றது.
பட்டு கைத்தறி உற்பத்தியாளர் கே.பி. பரந்தாமன் தலைமை தாங்கினார், உற்பத்தி யாளர் குருராஜ் சிறப்புரையாற்றினார், சிஐடியு மாவட்டச் செயலாளர் இரா.பாரி, சிபிஎம் மூத்த தலைவர் எம். வீரபத்திரன், மாவட்ட நிர்வாகிகள் சி. அப்பாசாமி, பெ. கண்ணன், ஆர். சிவாஜி, சி. ரமேஷ்பாபு, போளூர் ரவிதாசன், வெ.சங்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பட்டு கைத்தறியில் தயாரிக்கப்பட்டு வரும் பட்டு சேலை டிசைன்களை, அரசின் விதிமுறைகளை மீறி, விசை தறியில் நெய்து, பட்டு சேலை விற்பனை நிலையங்களில் விற்பனை செய்வதை தடுத்து நிறுத்த வேண்டும், புவிசார் குறியீடு பெற்றுள்ள ஆரணி பட்டு கைத்தறி நெசவாளர்களின் வாழ்க்கை பாதிக்கப்பட்டு, வருமானத்தை இழந்து வறுமை நிலையை நோக்கி செல்லும் கைத்தறி நெசவாளர்களை பாதுகாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.
இந்த ஆலோசனை கூட்டத்தில், டிசைனர் கணேசன், புதுப்பட்டு முருகேசன், தேவிகா புரம் சிவானந்தம், சைதாப்பேட்டை குமர குரு, சேவூர் தனசேகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.