districts

பர்சனல் கம்ப்யூட்டர் வேகமாக செயல்பட புதிய எஸ்.எஸ்.டி

சென்னை, ஜூலை 4-

     பல்வேறு சாப்ட்வேர்கள் நமது பர்சனல் கம்ப்யூட்டரின் ஹார்டு டிஸ்க்கில் அதிக இடத்தை ஆக்கிரமித்துக் கொள்வதால் அதன் வேகம் குறைந்துவிடும். இதன் காரணமாக அதன் வேகத்தை அதிகரிக்க சாப்ட்வேர்களை எஸ்எஸ்டி–யில் பதிவேற்றம் செய்கிறோம்.  

     தற்போது கம்ப்யூட்டர்களின் வேகத்தை அதிகரிக்க வெஸ்டர்ன் டிஜிட்டல் ப்ளூ புதிய எஸ்என்570 என்விஎம்இ எஸ்எஸ்டியை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய எஸ்எஸ்டியை ஏற்கெனவே உள்ள ஹார்ட் டிஸ்க் உடன்  இணைப்பதன் மூலம் உங்களின் பர்சனல் கம்ப்யூட்டர்களின் செயல்திறன் நன்றாக இருக்கும்என்றுஅந்நிறுவனம்கூறியுள்ளது.  ஹாட் டிஸ்களுடன் எஸ்எஸ்டி–க்களை  ஒப்பிடுகையில் அதிவேகமாக செயல்படும் திறன் கொண்டதாகும். உங்கள் பட்ஜெட்டிற்கு ஏற்ப சாட்டா எஸ்எஸ்டி அல்லது என்விஎம்இ–ல் இயங்கும் எஸ்எஸ்டி களைத் தேர்ந்தெடுக்கலாம் எனவெஸ்டர்ன் டிஜிட்டல்ப்ளு நிறுவன செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.