மியாட் மருத்துவமனையின் 25-வது ஆண்டு நிறுவனர் தின விழா சென்னையில் நடந்தது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு, விழாவுக்கான தபால் தலையை வெளியிட்டார்.மியாட் மருத்துவமனை நிறுவனர் மருத்துவர் பி.வி.மோகன்தாஸ், தலைவர் மல்லிகா மோகன்தாஸ், நிர்வாக இயக்குநர் மருத்துவர் பிரித்வி மோகன்தாஸ், தபால் துறை இயக்குநர் எம்.மனோஜ் ஆகியோர் பங்கேற்றனர்.