districts

img

அமைச்சர் க.பொன்முடி இறுதி கட்ட தேர்தல் பிரச்சாரம்

விழுப்புரம், ஏப்.18- விழுப்புரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் விசிக வேட்பாளர் துரை.ரவிக்குமாரை ஆதரித்து நடைபெற்ற பிரச்சாரம் புதனன்று  அறிவாலயம் முன்பு நிறைவடைந்தது. விழுப்புரம் ரயில் நிலை யம்முன்பு அமைச்சர் பொன்முடி தலைமையில் தொடங்கி ஊர்வலம்  நேருஜி  சாலை, சென்னை-திருச்சி நெடுஞ்சாலை வழியாக சென்றுஅறிவாலயம் முன்பு நிறைவு பெற்றது. இதில் காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஆர்.டி.வி.சீனிவாசகுமார், சிபிஎம் முன்னாள் எம்எல்ஏ ஆர்.ராம மூர்த்தி, மாவட்ட செயலாளர் என்.சுப்பிரமணியன், சிபிஐ மாவட்ட செயலாளர் ஆ.சவுரிராஜன், மனித நேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, மதிமுக உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.