சென்னை, செப். 28- சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அலுவலகத்தில், 2022-2023ஆம் ஆண்டிற்கான மருத்துவ பட்டமேற்படிப்பு, பட்டய படிப்பு மற்றும் பல் மருத்துவ பட்ட மேற்படிப்பு மற்றும் தேசிய வாரிய பட்ட படிப்பிற்கான தரவரிசைப் பட்டியலை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளி யிட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறு கையில், மருத்துவ பட்ட மேற்படிப்புக் கான தரவரிசைப்பட்டியல் வெளியிடப் பட்டுள்ளன. இவற்றிற்கான கலந்தாய்வு இணையதளம் வாயிலாக நடைபெறும். கலந்தாய்வு அட்டவணை பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்படும். மருத்துவ பட்டமேற்படிப்பு, பட்டயபடிப்பு, மேற்படிப்புகளுக்கான அரசு கல்லூரிகளில் 1,162 இடங்களும், மருத்துவ பட்ட, பட்டய, மேற்படிப்புகளுக்கான நிர்வாக கல்லூரிகளில் 763 இடங்களும், பல் மருத்துவ பட்டமேற்படிப்பிற்கான அரசு கல்லூரிகளில் 31 இடங்களும், பல் மருத்துவ பட்ட மேற்படிப்பிற்கான சுயநிதி கல்லூரிக ளில் 296 இடங்களும், தேசிய வாரிய பட்டபடிப்பு இடங்கள் 94 என மொத்தம் 2,346 இடங்கள் உள்ளன. விண்ணப்பித்த மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 11,178 ஆக உள்ளன. மேலும், மருத்துவ மாணவர்கள் மற்றும் பல் மருத்துவ மாணவர்கள் சேர்க்கைக்கு செவ்வாய்க்கிழமை வரை விண்ணப்பங்கள் பெற பதிவு செய்தவர்கள் 21,183 ஆகவும், இதுவரை 12,429 பூர்த்தி செய்த விண்ணப் பங்களும் பெறப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.