districts

img

வேலூரில் மே தினப்பேரணி

உழைக்கும் தொழிலாளர் திருநாளாம் உலக தொழிலாளர் தினத்தை யொட்டி சிஐடியு வேலூர் மாவட்டக்குழு மற்றும் மாநகர தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் மே தின ஊர்வலம் வேலூர் நேஷனல் சந்திப்பில் துவங்கி காட்பாடி சாலை, பழைய பேருந்து நிலையம் வழியாக சென்று அண்ணா கலையரங்கில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.  சிஐடியு மாவட்ட தலைவர் டி.முரளி தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் எம்.கோவிந்தராஜ் முன்னிலை வகித்தார். இதில்  மாநகர தொழிற்சங்க கூட்டமைப்பு  கன்வீனர் சி.ஞானசேகரன், ஜோசப் அன்னையா (ஆசிரியர் சங்கம்), கே.சாமிநாதன் (விவசாயிகள் சங்கம்), செ.ஏகலைவன் (விவசாய தொழிலாளர் சங்கம்), பி.சத்தியநாராயணன்(மருந்து விற்பனை பிரதிநிதிகள் சங்கம்) பேசினர். முடிவில் சிஐடியு மாவட்ட செயலாளர் எஸ்.பரசுராமன் கூட்டத்தை நிறைவு செய்து பேசினார்.