சென்னை, ஜூலை 22- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இடைக்குழு உறுப்பினரும், தமிழக மக்கள் ஒற்றுமை மேடை மாவட்டக் குழு உறுப்பினரு மான தோழர் யுவராஜ் (59) ஞாயிற்றுக் கிழமை (ஜூலை 21) காலமானார். தோழர் யுவராஜ், டி.பி. சத்திரம், செனாய் நகர் ஆகிய பகுதிகளில் வாலிபர் சங்கத்தை வளர்ப்பதற்கு பெரும் பங்காற்றினார். காப்பீட்டு ஊழியர் சங்கத்தின் யூனிட் 1இன் கிளைச் செயலாளராக செயல்பட்டார். தனது இறுதி மூச்சு வரை சங்க பணிகளிலும், கட்சிப் பணிகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். சென்னை அயனாவரத்தில் வைக்கப் பட்டிருந்த அவரது உடலுக்கு கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் எம்.ராம கிருஷ்ணன், மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா, செயற்குழு உறுப்பினர்கள் இரா.முரளி, கே.எஸ்.கார்த்தீஷ் குமார், காப்பீட்டு ஊழியர் சங்கத்தின் தலைவர்கள் கே.சுவாமிநாதன், வி.ஜானகிராமன், கே.மனோகரன்,கே.நந்தகோபால், சீனிவாசன், சுகுமார், மகேந்திரவர்மன், எம்.ஆர்.மதியழகன், தில்லி, முத்துராஜன், கிளைச் செயலாளர் ஆபேல் பாபு, ஏ.பி.செல்வம் உள்ளிட்ட ஏராளமானோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அவரது உடல் திங்கட்கிழமை (ஜூலை 22) மாலை கீழ்ப்பாக்கம் கல்லறையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.