districts

img

சிஐடியு முன்னணி ஊழியர் பொன்.முத்தழகன் காலமானார்

கிருஷ்ணகிரி, டிச 19-  ஓசூர் அசோக் லேலண்ட் ஆலைத்தொழிலாளியும் சிஐடியு முன்னணி ஊழியருமான தோழர்.பொன் முத்தழகன் காலமானார். 1980இல் பணிக்குசேர்ந்தது முதல் சிஐடியு, மார்க்சிஸ்ட் கட்சியில் தன்னை இணைந்து பிற தொழிற்சாலைகளிலும் சிஐடியு சங்கத்தை அமைக்கும் முன்னணி ஊழியராக செயல்பட்டார். தொழிற்சங்கத்தை முடக்குவதற்காக அசோக் லேலண்ட் நிர்வாகத்தால் 1983  பொன். முத்தழகன் உள்ளிட்ட 6 பேர் மீது பல வழக்குகளை போடப்பட்டது. இதில் பொன். முத்தழகன் உள்ளிட்ட  5 பேர் நான்கு மாதங்கள் சிறையில் இருந்தனர். 1988 ஆகஸ்ட் மாதம் பணி நீக்கம் செய்யப்பட்டார். 6 ஆண்டுகள் வழக்கு நடத்தி வெற்றி பெற்று 1993 இல் பொன்முத்தழகன் உள்ளிட்ட  5 பேரும்  மீண்டும் பணிக்கு சேர்ந்தனர்.  உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி   உயிரிழந்தார். தோழர் பொன்முத்தழகன் மறைவுக்கு சிஐடியு சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது. அவரது குடும்பத்தினரை சந்தித்து சிஐடியு நிர்வாகிகள் அந்தோணிஜார்ஜ், முத்து நாராயணமூர்த்தி, ரசாலம், சந்திரபாபு ஆகியோர்  ஆறுதல் கூறினர்.

;