சென்னை, ஆக. 18 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திரு விக நகர் மங்களபுரம் முன்னாள் கிளை செய லாளரும், சிஐடியு மாவட்டக் குழு உறுப்பி னரும், நெல்சன், நிக்கோலஸ் தாயாருமான ஆர்.சூசைமேரி (52) சனிக்கிழமை காலமானார். அவரது உடலுக்கு கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் எம்.ராமகிருஷ்ணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.கே.மகேந்திரன், கே.எஸ்.கார்த்தீஷ்குமார், பகுதிச் செயலாளர் வி.செல்வராஜ், நிர்வாகி கள் பா.தேவி, பி.கிருஷ்ணன், என்.மோகன். சி.வினோத், கே.முருகேசன், எம்.சுப்பிர மணி, அரசு ஊழியர் சங்க வட சென்னை மாவட்ட செயலாளர் எம்.அந்தோணி, சண்முகம் (டீலக்ஸ் ரப்பர்) உள்ளிட்ட ஏராளமானோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவரது உடல் ஞாயிறன்று கீழ்ப்பாக்கத்தில் உள்ள கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது.