தனது மகனுக்கு எஸ்சி சாதிச் சான்று வழங்க அதிகாரிகள் மறுத்ததால் மனமுடைந்த மலைக்குறவன் இனத்தை சேர்ந்த வேல்முருகன் உயர்நீதிமன்றம் முன்பு தற்கொலை செய்துகொண்டார். இந்த நிலையில், அவரது மனைவி சித்ரவுக்கு குன்றத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வீட்டு மனைப் பட்டா மற்றும் ஒரு லட்சம் ரூபாய் பணமும் மாவட்ட வருவாய் அலுவலர், வட்டாட்சியர் ஆகியோர் வழங்கினர். தமிழ் நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநில துணைத் தலைவரும் தமிழ்நாடு குறவன் பழங்குடி மக்கள் முன்னேற்ற சங்கத்தின் பொதுச் செயலாளருமான ஏ.வி.சண்முகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் குன்றத்தூர் பகுதிச் செயலாளர் ராஜா. எஸ்.ராஜகோபால், எம். சங்கர் ஆகியோர் உடனிருந்தனர்.