districts

img

தென்தமிழ்நாட்டின் அறிவாலயம் கலைஞர் நூலகம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

மதுரை,ஜூலை 16-

      தென் தமிழ்நாட்டின் அறிவாலயம் மதுரை கலைஞர்  நூற்றாண்டு நூலகம் என்று முதலமைச்  சர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் கூறினார்.

   மதுரையில் புதுநத்தம் சாலையில் பிர  மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள கலைஞர்  நூற்றாண்டு நூலகத்தின் திறப்பு விழா ஜூலை 15  சனிக்கிழமையன்று பள்ளி கல்வித்துறை  அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி  தலைமையில் நடைபெற்றது.  

    இதில். நூலக வளாகத்தில் முன்னாள் முதல்  வர் கலைஞர் கருணாநிதிக்கு அமைக்கப்  பட்டுள்ள உருவச்சிலையையும், கலைஞர் நூற்றாண்டு நூலகத்தையும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    விழாவில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியதாவது:

    சொன்னதை மட்டுமல்ல, சொல்லாததையும் செய்வான் இந்த ஸ்டாலின் என்பதற்கு எடுத்துக் காட்டுதான் சென்னையில் மருத்துவமனையும், மதுரையில் இந்த நூலகமும்.இவை இரண்டும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் அறிக்கையில் அளிக்காத வாக்குறுதிகள்!

    தமிழ்நாட்டினுடைய தலைநகர் சென்னை என்றால், இந்த மதுரை, தமிழ்நாட்டினுடைய கலைநகர்!

    இந்த நூலகத்தை திறந்து வைக்கக்கூடிய பெரும் வாய்ப்பும், பெருமையும் எனக்கு கிடைத்  திருப்பதை எண்ணி எண்ணி மகிழ்ச்சியடை கிறேன்.

    சங்கம் வைத்து தமிழ் வளர்த்த இந்த மாமது ரையில் சங்ககால இலக்கியங்களை சாமானி யருக்கும் கொண்டு சேர்க்கும் வகையில் சங்கத்  தமிழ் இயற்றிய மாமதுரையில் நூலகம் வைக்கா மல் வேறு எங்கு வைக்க முடியும்.

    படிப்பகங்களால் வளர்ந்து, ஆட்சிப் பொறுப்புக்கு வந்து இன்று பிரம்மாண்டமான நூலகங்களை கட்டியெழுப்பிக் கொண்டு இருக்கிறோம்.  

   அன்றைக்கு இருந்த சமூகச் சூழலும், அரசி யல் சூழலும் கலைஞருக்குள்ளே இருந்த போரா ளியும், அவர் விரும்பிய பள்ளிப் படிப்பைத் தொடர முடியாமல் போனதற்குக் காரணம்.

   ஆனால், கலைஞருக்குள்ளே இருந்த அந்தப் போராளிதான் இன்றைக்கு பலரும் படிக்க காரணம்!   எத்தனை தடைகள் வந்தாலும், படிப்பை மட்டும் நீங்கள் யாரும் கைவிடக் கூடாது. படிப்பு  மட்டும்தான் யாராலும் திருட முடியாத நிலையான  சொத்து!

    அந்தப் படிப்பை நாம் எல்லோரும் அடைய வேண்டும் என்ற தலைவர் கலைஞர் உருவாக்கி யதுதான் இன்றைய நவீன தமிழ்நாடு!  

   கல்வியைக் கொடுத்துவிட்டால், ஒரு மனிதருடைய வளர்ச்சியை யாரும் தடுக்க முடி யாது என்று அதற்கான மொத்த அடித்தளத்தை யும் அமைத்து கொடுத்தது கலைஞரோட திமுக ஆட்சி! இதனுடைய தொடர்ச்சியாகத்தான் இன்  றைக்கு நம்முடைய அரசும் கல்விக்கு முக்கியத்து வம் வழங்கி வருகிறது.

   தரமான கல்வி வழங்குவதில், இந்தியாவி லேயே தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் இருக்கி றது. முதலிடத்துக்கு முன்னேற வேண்டும் என்ப தற்கான அனைத்துப் பணிகளையும் செய்து கொண்டு இருக்கிறோம்.

   மாணவக் கண்மணிகளுக்கு நான் சொல்வது, அரசு உருவாக்கித் தரக்கூடிய அனைத்து வாய்ப்பு களையும் பயன்படுத்திக் கொள்ளுங்கள். படிக்  கின்ற காலத்தில் கவனச் சிதறல்கள் வேண்டாம்.  படிப்பு ஒன்றையே நோக்கமாகக் கொண்டு செயல்படுங்கள். நாளைய நம்பிக்கை நீங்கள்.  நாளைய எதிர்காலம் நீங்கள். உங்கள் பெற்றோர் மட்டுமல்ல, இந்த நாடே உங்களை எதிர்நோக்கி காத்திருக்கிறது.நிறைவாக, தலைவர் கலைஞ ரின் வரிகளோடு முடிக்கிறேன். “புத்தகத்தில் உல கைப் படிப்போம், உலகத்தை புத்தகமாய்ப் படிப்போம்”. இவ்வாறு அவர் பேசினார்.

    அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு,  பி. மூர்த்தி, பி. டி. ஆர். பழனிவேல் தியாகராஜன் ஆகி யோர் முன்னிலை வகித்தனர்.  மதுரை நாடாளு மன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன், எச். சி. எல்.  குழுமம் நிறுவனர் ஷிவ் நாடார், தலைவர் ரோஷினி, பள்ளிக் கல்வித்துறை அரசு முதன் மைச் செயலாளர் காகர்லா உஷா, பொது நூல கங்கள் இயக்குநர் இளம்பகவத்,  மதுரை மேயர் இந்திராணி பொன்வசந்த், மாவட்ட ஆட்சியர் ம. சௌ. சங்கீதா, மாநகராட்சி ஆணையாளர் கே.ஜே.பிரவீன்குமார், நாடாளுமன்ற, சட்ட மன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்பு களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பொதுப்பணித்துறை அரசு முதன்  மைச் செயலாளர் பி. சந்திர மோகன் நன்றி கூறினார்.

;