districts

img

சுதந்திர தின ரத்ததான முகாம்

திருவண்ணாமலை,ஆக.20-

     நாட்டின் 77 ஆவது சுதந்திர தினத்தையொட்டி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ஞாயிறன்று (ஆக.20) திருவண்ணாமலை, முஹல் புறா தெரு, எம்.ஏ.காதர் சேட் நினைவில் உள்ள உயர் நிலைப் பள்ளியில் ரத்த தான முகாம் நடைபெற்றது.

     திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையுடன் இணைந்து நடத்தப்பட்ட இந்த முகாமிற்கு இயக்கத்தின் மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் ஏ. உபயதுல்லாஹ் தலைமை தாங்கினார். திருவண்ணாமலை நகர காவல் நிலைய காவல் ஆய்வாளர் சுபா துவக்கி வைத்தார். மாவட்டத் தலைவர் முஹம்மது ரியாஸ்,  செயலாளர் ஸபியுல்லாஹ், பொருளாளர்  அப்துல் ரஹ்மான், மாவட்ட துணைத் தலைவர் காதர் ஷரீப், நகரச் செயலாளர் முஸ்தபா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.