விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (டிச.8) நடந்த மனித உரிமைகள் தின விழா நிகழ்வில் மாவட்ட காவல்துறை பணியாளர்கள் உறுதிமொழி ஏற்றனர். மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கோவிந்தராஜ் தலைமையில் காவல்துறை ஆளிநர்கள், அமைச்சு பணியாளர்கள் திரளாக கலந்து கொண்டு மனித உரிமை உறுதிமொழி ஏற்றனர்.