districts

img

பர்கர் சாப்பிடும் போது சிக்கிய கையுறை: சமூக வலைத்தளங்களில் வைரலான வீடியோ

விழுப்புரம், செப். 13- விழுப்புரம் அருகே உணவகத்தில் பர்க்கரில் கையுறை இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர், அதனை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தைச் சேர்ந்தவர் டேவிட். இவர் தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணி யாற்றி வருகிறார். பணியை முடித்துவிட்டு தனது நண்பர்க ளுடன் சாப்பிடுவதற்காக ஆரோவில் அருகே உள்ள பிரபல உணவுக் கடையான கே.எப்.சி. சிக்கன் கடைக்கு சென்றுள்ளனர். அங்கே டேவிட் பர்கர் வாங்கியுள்ளார். பர்கரை சாப்பிட்டுக் கொண்டிருந்த போது ஏதோ ஒரு பிளாஸ்டிக் பொருள் தென்பட்டுள்ளது. உடனடியாக பர்கரை பிரித்து பார்த்த  போது அதில் கையுறை இருந்தது தெரியவந்தது. இதைக்  கண்ட டேவிட்டும், அவரது நண்பர்களும் அதிர்ச்சியடைந் தனர். பர்கரில் கையுறை இருந்ததை உடனடியாக உணவ கத்தின் ஊழியர்களிடம் தெரிவித்துள்ளனர். ஊழியர்கள் மன்னிப்பு கேட்டு வேறு பர்கர் தருவதாக கூறியுள்ளனர். அதற்கு டேவிட் வேண்டாம் என தெரிவித்ததோடு, கையுறை  இருந்ததை வீடியோ எடுத்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு அந்த வீடியோவை அனுப்பியுள்ளார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. சமீபத்தில் ஆரணி பகுதியில் பீட்ரூட்டில் எலி தலை இருந்தது தொடர்பாக செய்தி வெளியானது. தற்போது பர்கரில் கையுறை இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து அரங்கேறி வரும் இதுபோன்ற சம்பவங்கள் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

;