districts

img

நிலத்தடி நீரை நஞ்சாக்கும் குப்பைக் கிடங்கை அகற்றக் கோரிக்கை

அம்பத்தூர், டிச. 4- அம்பத்தூர் அம்பேத்கர் சிலையில் இருந்து வானகரம் செல்லும் சாலையில் அத்திப்பட்டு கலைவாணர் நகர் அருகே குப்பைக் கிடங்கு உள்ளது. இங்கு அம்பத்தூர் மண்டலத்திற்குட்பட்ட 15 வார்டுகளில் இருந்து சேகரிக்கப் படும் குப்பைகள் இங்கு கொட்டப் பட்டு மலைபோல் காட்சியளித்தது. இந்த குப்பைக் கிடங்கை சுற்றி  10க்கும் மேற்பட்ட சிறு தொழில் நிறுவனங்கள் உள்ளன. மேலும் அத்திப்பட்டு சின்ன காலனி, பெரிய காலனி, மேட்டுத் தெரு, கலை வாணர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இந்த குப்பைக் கிடங்கில் இருந்து வெளியேறும் கழிவு நீர் பூமியில் இறங்குவதால், நிலத்தடி நீர் நாசமானது. இதனால் குப்பைக் கிடங்கை சுற்றி குடியிருப்புகள் கிணற்று நீரையும், ஆழ்துளை கிணற்று நீரையும் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் குடிநீரை காசு கொடுத்து வாங்க  வேண்டிய கட்டாயநிலை உள்ளது.  மேலும் அந்த குப்பைக் கிடங்கி லிருந்து துர்நாற்றம் வீசுவதுடன், கொசு உற்பத்தியாகும் மையமாக வும் திகழ்கிறது. இதில் முதியோர், குழந்தைகள் பல்வேறு நோய்க ளால் பாதிக்கப்படுகின்றனர்.

இதையடுத்து குப்பைக் கிடங்கை அகற்ற கோரி மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பல கட்ட போராட்டங்கள் நடத்தப் பட்டன. சில அரசியல் அமைப்புக ளும், பொதுநலச் சங்கத்தினரும் குப்பைக் கிடங்கை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்த னர். இதையடுத்து சேகரிக்கப் படும் குப்பைகள் இங்கு கொட்டப்பட்டு பின்னர் அங்கி ருந்து கொடுங்கையூர் குப்பை  கிடங்கிற்கு எடுத்துச் செல்லப்படு கிறது. ஆனால் மழைக்காலங்களில் இந்தக் குப்பைக் கிடங்கில் இருந்து  வெளியேறும் கழிவுநீரை பூமியில்  இறங்கும் நிலை நீடிக்கிறது.  பழைய  குப்பைக் கிடங்கை அகற்று வதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. குப்பையில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலையில் தேங்கி நிற்பதால், சாலை சேதமடைந்து சேறும் சகதியுமாக மாறி விடுகிறது. இந்நிலையில் முழுமையாக குப்பைக் கிடங்கை அகற்றக் கோரி யும், பாதாள சாக்கடை திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதில் மாவட்டக் குழு உறுப்பினர் சு.லெனின் சுந்தர்,  பகுதிச் செயலாளர் ஆர்.கோபி,  கிளைச் செயலாளர்கள் சி.ஆனந்த்,  சுரேஷ்குமார், ஆர்.சுனிதா, ஏ.ராயப் பன் (மோட்டார் வாகனம்) உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  குப்பைக் கிடங்கை அகற்றும் வரை தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என பகுதி செயலாளர் தெரிவித்தார்.

;