கடலூர், ஜூலை.2 -
கடலூர் துறைமுகத்தில் வரத்து குறைவால் மீன்கள் விலை உயர்ந்து காணப் பட்டது.
கடலூர் துறைமுகத்தில் அக்கரைகோரி, சிங்காரத் தோப்பு, சோனங்குப்பம் தேவனாம்பட்டினம் உள்ளிட்ட மீனவ கிராமங்கள் உள்ளன. இங்கிருந்து தினந் தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட விசை மற்றும் பைபர் படகுகளில் மீன வர்கள் மீன் பிடிக்க சென்று வருகின்றனர். இதில் பெரிய அளவிலான படகுகள் மூன்று நாட்களுக்குப் பிறகு கரை திரும்பும். பைபர் படகு கள் சில மணி நேரங்களில் மீன் பிடித்து விட்டு கரையை திரும்பும். இந்நிலையில் ஞாயிறன்று கடலூர் துறை முகத்தில் மீன்கள் வரத்து சற்று குறைவாக காணப் பட்டது. வழக்கமாக 250 முதல் 350 ரூபாய் வரை விற்கப்படும் பாறை மீன் ரூ500 முதல் 550 வரை விற்கப்பட்டது. பன்னி சாத்தான் மீன் வழக்கத்திற்கு மாறாக ரூ500 விற்கப்பட்டது. அதிகப்பட்சம் ரூ700 விற்கப்பட்ட வஞ்சிரம் மீன் ரூ1200 விற்கப்பட்டது. அதலை மீன் ஒரு கிலோ 500 க்கு விற்கப்பட்டது. இதே போல நெத்திலி மீன் ரூ250ம், கனவா வகை மீன் ரூ200 , கானாங்கத்தை மீன் ஒரு கிலோ ரூ120 விற்பனை செய்யப்பட்டது. இருப்பினும் மீன்கள் வாங்க கடலூர் துறைமுகத்தில் பொதுமக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது விலையை பொருட்படுத் தாமல் வேறு வழியின்றி பொதுமக்கள் மீன்களை வாங்கிச் சென்றதை காண முடிந்தது.