districts

சென்னை முக்கிய செய்திகள்

தர்பூசணி, முலாம்பழம்  விலை வீழ்ச்சி: விவசாயிகள் கவலை

கள்ளக்குறிச்சி மே 31- கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் தாலுகா வாணாபுரம் அருகில் ரங்கப்பனூர், லக்கி நாயக்கன்பட்டி கிராமங்களில் பெரும் பாலான விவசாயிகள் 50 ஏக்கர் பரப்பள வில் தர்பூசணி மற்றும் முலாம்பழம் பயி ரிட்டுள்ளனர். தற்போது, அறுவடை செய்திருக்கும் விவசாயிகள் கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருக்கோவிலூர், சேலம், செங்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிக்கு அனுப்பி வைத்து வருகின்றனர். சில தினங்களுக்கு முன்பு வெயிலின் தாக்கம் குறைந்து லேசான மழை பெய்ததால்  கிலோ 5 ரூபாய் முதல் 7 ரூபாய் வரை  மட்டுமே விலை போனதால் விவசாயிகள்  கவலை அடைந்துள்ளனர்.  விவசாயத்திற்கு  செய்த தொகையை கூட எடுக்க முடிய வில்லை என்றும் மாவட்ட நிர்வாகம் தலை யிட்டு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள் ளனர்.

திருடு போன நகை மீட்பு: காவல்துறைக்கு மூதாட்டி நன்றி

காஞ்சிபுரம், மே 31- காஞ்சிபுரம் மாவட்டம் ஓரிக்கை காமாட்சி அம்மன் காலனியை சேர்ந்த மூதாட்டி கிருஷ்ணவேணி (85). இவர் அணிந்திருந்த 5 சவரன் நகைகளை கழற்றி வைத்துவிட்டு குளிக்க சென்றுள்ளார். பின்னர் வந்து பார்த்த போது நகைகள் காணாமல் போயிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவசர எண் 100 மூலம் காவல்துறைக்கு புகார் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து விசாரணை நடத்திய காவல்துறையினர் நகை களை மீட்டு மூதாட்டியிடம் ஒப்படைத்தனர். கண்ணீர் மல்க மூதாட்டி நன்றி தெரி வித்தார்.

கோரிமேட்டியில் தொடர் மின் தடை: கிராம பொதுமக்கள் புகார்

திருவள்ளூர், மே 31- கும்மிடிப்பூண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட கோரிமேடு பகுதியில் ஏற்படும் தொடர் மின் தடையை சரி செய்ய நடவடிக்கை வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பைபாஸ் சாலையை ஒட்டி இருக்கும் கோரிமேடு கிராமத்தில் தொடர்ந்து கடந்த 5 நாட்களாக மாலை மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை தொடர்ந்து மின்தடை ஏற்படுகிறது. இதுகுறித்து மின்சார வாரிய அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு பேசினால், முறையான பதில் இல்லை. மின்சாரம்  எப்போது வரும் என்று கேட்டால் போன் தொடர்பை துண்டிக்க  கூடிய நிலை இருப்பதாக பொதுமக்கள் கூறுகின்றனர். கோரி மேட்டில் வசிக்கக்கூடிய. 15க்கும் மேற்பட்ட குடும்பங்களில் உள்ள குழந்தைகள், முதியோர் என  அனைவரும் கொசு கடியால், புழுக்கத்தால் அவதிப்படு கின்றனர். இதனால் இரவு நேரங்களில் தூக்கமின்றி தவிக் கின்றனர். அதேபோல் கும்மிடிப்பூண்டி நகர் முழுவதும் அடிக்கடி மின் தடை ஏற்படுவதாகவும்  கூறுகின்றனர். இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கும்மிடிப்பூண்டி வட்டக் குழு உறுப்பினர் வி.ேஜாசப் கூறுகை யில், தொடர்ந்து மின்தடை ஏற்பட்டால், பைபாஸ் சாலையில்  மக்கள் அனைவரும் பாய் போட்டு படுத்து உறங்கும் போராட் டத்தில் ஈடுபடுவோம் என்று எச்சரிக்கை விடுத்தார்.

உடல் உறுப்பு தானம்:  காப்பீடு, உதவித் தொகை வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை, மே 31- உடல் உறுப்பு தானம் செய்த வருக்கு அறுவை சிகிச்சைக்கு பின் 3  ஆண்டுக்கு மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை தர வேண்டும் என்று மாநில  அளவிலான குழுவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்ட  கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நான்கு பேருக்கு, சிறுநீரக தானம் வழங்க முன்வந்த வர்கள் நெருங்கிய உறவினர்கள் அல்ல எனக் கூறி, சிறுநீரக தானத்துக்கு ஒப்புதல் வழங்கக் கோரி உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு அனுமதி அளிக்கும் குழுவுக்கு சம்பந்தப்பட்ட மருத்துவமனை விண்ணப்பிக்கவில்லை. இந்நிலையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு ஒப்புதல் கோரி தானம் பெறுபவர்கள், வழங்குபவர்கள் சேர்ந்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு  தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி சுவாமிநாதன், உடல் உறுப்பு கள் விற்பதை தடுக்க உடல் உறுப்பு மற்றும் திசுக்கள் மாற்று அறுவை சிகிச்சை சட்டம் இயற்றப்பட்டது. உடல் உறுப்பு தான ஒப்புதல் கோரும் விண்ணப்பத்தை மருத்துவமனைதான் அனுப்ப வேண்டும் என குழு வற்புறுத் தக்கூடாது என்றும், தானம் பெறுபவர்,  வழங்குபவர் இணைந்து மாநில அள விலான குழுவுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தர விட்டுள்ளார். மேலும் உடல் உறுப்பு தான விண்ணப்பத்தை பரிசீலித்து ஒப்புதல் வழங்குவதுடன் குழுவின் பணி முடிவடைந்து விடவில்லை என குறிப்பிட்டுள்ள நீதிபதி, அறுவை சிகிச்சைக்கு பின் ஏற்படும் மருத்துவ செலவுகளை சமாளிக்க உறுப்பு தானம் வழங்கியவருக்கு மருத்துவ காப்பீடு செய்வதுடன், 3 ஆண்டுக்கு மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையை வழங்க தேவையான உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் என  குழுவுக்கு உயர்நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. கடந்த 2007-2008 ஆம் ஆண்டில்  முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆட்சியில் உடல் உறுப்பு தான திட்டம்  கொண்டுவரப்பட்டது. கடந்த தேர்தலில்  திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தமிழ் நாட்டில் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் உடல் உறுப்பு தானம் பெறக்கூடிய  வகையில் உரிமம் வழங்கப்பட்டுள்ளது.   மூளைச்சாவு அடைந்தவர்களின் உடல்  உறுப்புகள் தானமாக பெறப்படுகிறது. இந்தியாவில் மட்டுமல்ல உலகிலேயே உடல் உறுப்புகள் தானம்  செய்வதில் தமிழ்நாடு முதல் இடத்தில்  உள்ளது. உடல் உறுப்பு தானம் செய்வதன் மூலம் மறைந்த பிறகும் பலரை வாழ வைக்க முடியும்.  அதனை  தொடர்ந்து கடந்த ஆண்டு செப்டம்பர் 23ஆம் தேதி உடல் உறுப்பு தான தினத்தை முன்னிட்டு உடல் உறுப்பு தானம் செய்பவர்களுக்கு அரசு மரியா தையுடன் இறுதிச் சடங்கு செய்யப்படும்  என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தலைவர் பதவியை முழுமையாக நிறைவு செய்ய கோரிக்கை

கள்ளக்குறிச்சி, மே 30- கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் ஊராட்சி மன்ற தலைவர் கள் கூட்டமைப்பு  சார்பில் வட்டார வளர்ச்சி அலுவல கத்தில் ஆலோசனை கூட்டம்  நடைபெற்றது. இந்த  கூட்டத்தில், எதிர்வரும் டிசம்பர் மாதம் ஊராட்சி மன்ற தலைவர்களின் பதவிக் காலம் முடிவடை கிறது. அதே நேரத்தில், 2021  ஆம் ஆண்டில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 புதிய மாவட்டங்களில் ஊராட்சி மன்றத் தலைவர்கள் பதவி காலம் 5 ஆண்டுகள் முழு மையாக நிறைவு அடைய வில்லை என்பதால் அதற்கு முன்பு கலைக்கக் கூடாது என்று தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடப்பட்டது.

வேலூரில் சிறப்பு கண் பரிசோதனை முகாம் 

வேலூர், மே 31- வேலூர் மாவட்ட பிஎஸ்என்எல் எம்ப்ளாயீஸ் யூனியன் மற்றும் அகில இந்திய பிஎஸ்என்எல் டாட் பென்ஷனர்ஸ் அசோசியேஷன் டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனையுடன் இணைந்து பிஎஸ்என்எல்-லில் பணியாற்றும் ஊழியர்கள், ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கான சிறப்பு கண் பரிசோதனை முகாம் வேலூரில் சங்க அலுவலகத்தில் பென்ஷனர்ஸ் அசோசியேஷன் மாவட்ட தலைவர் சி.ஞானசேகரன் தலைமையில் நடைபெற்றது. மாநில துணைத் தலைவர் லோகநாதன் முன்னிலை வகித்தார். எம்ப்ளாயீஸ் யூனியன் மாவட்டச் செயலாளர் மாரிமுத்து அனைவரையும் வரவேற்றார். பிஎஸ்என்எல் வேலூர் மண்டல முதன்மை பொது மேலாளர் ஏ.வி.ஸ்ரீகுமார் துவக்கி வைத்தார்.

புனரமைக்கப்படும் அருங்காட்சியகம்: ஆட்சியர் ஆய்வு

கடலூர், மே 31- கடலூர் பழைய மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் அரசு அருங்காட்சியகம் செயல்பட்டு வருகிறது. பல்வேறு இடங்க ளில் இருந்து கொண்டுவரப்பட்ட பழமை யான கருங்கல் சிலைகள் வைப்பதற்கு முறையான இடம் இல்லாமல் ஆங்காங்கே கிடந்தன. மேலும் உள்ளே பல்வேறு பழமையான பொருட்களை வைப்பதற்கு இட பற்றாக்குறை இருந்தது. இதையடுத்து அருங்காட்சியகத்தை புனரமைக்கும் பணிக்காக ரூ. 49 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த பணிகளை 30 நாட்களில் முடிக்க வேண்டும் என்று அறி வுறுத்தப்பட்டது. இந்த அருங்காட்சியகத்தில் பிரமாண்ட முறையில் வைப்பதற்கு டைனோசர் மற்றும் அதன் முட்டைகள் தயார் செய்யும் பணி சென்னையில் நடைபெற்று வருகிறது.   இந்த நிலையில், புனரமைப்பு பணி களை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் ஆய்வு செய்தார். அப்போது, குறிப்பிட்ட காலத்திற்கு பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என்று அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது பொதுப்பணித் துறை (கட்டிடம்) உதவி பொறியாளர்கள் சிவ சங்கர நாயகி, சுரேஷ் மற்றும் அருங்காட்சி யக காப்பாட்சியர் ஜெயரத்தினா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

வெயிலின் தாக்கத்தால்  மயங்கி விழுந்த மாணவர் சாவு

அம்பத்தூர், மே 31- திருநின்றவூரில் கடும் வெயிலின் தாக்கத்தால் சக்தி என்ற 12ஆம் வகுப்பு மாணவன் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருநின்றவூர் கோமதிபுரத்தை சேர்ந்த மாணவர் ஹரிசுதன். இவர் அதே பகுதியில் உள்ள தாசர் மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து முடித்துள்ளார். அவருக்கு இருந்த இதய நோய் பிரச்சனை காரணமாக சிகிச்சை பலனின்றி அவர் வியாழக்கிழமை மருத்துவமனையில் உயிரிழந்தார். கடந்தாண்டு அவரது அம்மாவும் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இறந்து போன ஹரிசுதன் உடலை பார்க்க அதே பள்ளியில் படித்த சக மாணவன் சக்தி வந்தபோது வெயில் தாக்கத்தால் மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக அவரை மீட்டு சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு பரிதாபமாக உயிரிழந்தார். உயிரிழந்த மாணவன் சக்தி வணிக கணித பாடத்தில் பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. நண்பனின்  உடலை பார்க்க வந்த சக்தி சுருண்டு விழுந்து உயிரிழந்த சம்பவம் அவர்களது பெற்றோர் மற்றும் உறவினர்கள் மட்டுமின்றி திருநின்றவூர் தாசர் மேல்நிலைப்பள்ளி மாணவர்களையும், ஆசிரியர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

கடலூர் சிப்காட்டில் தொழிலாளி மயங்கி விழுந்து சாவு

கடலூர், மே 31- கடலூர் சிப்காட்டில் உள்ள டான் பாக் என்ற  தனியார் தொழிற்சாலையில் மயங்கி விழுந்து தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.  கடலூர் முதுநகர் அருகே உள்ள கண்ணார பேட்டையை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (54). இவர் கடலூர் சிப்காட்டில் உள்ள டான்பாக்  தனியார் தொழிற்சாலையில் ஒப்பந்த தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். வெள்ளிக்கிழமை (மே 31) வழக்கம்போல் பணி செய்து கொண்டிருந்த ரவிச்சந்திரன் திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் ரவிச்சந்திரன் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். இதுகுறித்து கடலூர் முதுநகர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜூன். 4 மதுபானம் விற்க தடை 

கடலூர், மே 31- 2024 மக்களவைத் பொதுத் தேர்தல் சுதந்திரமாகவும், நியாயமாகவும், அமைதியான மற்றும் சுமூகமான முறையில் நடைபெறுவதை உறுதி செய்ய, தமிழ்நாடு மதுபானங்கள் சில்லரை விற்பனை, அரசு மதுபானக் கடைகள் மற்றும் மதுபான கடைகளுடன் இணைந்த மதுபானக் கூடங்கள் ஆகியவற்றை வாக்கு எண்ணிக்கை நாளான ஜூன் 4 அன்று அனைத்து வகை மதுபானங்கள் விற்பனை செய்வதைத் தமிழ்நாடு முழுவதும் முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளது.

பள்ளிகளுக்கு இணைய சேவை வழங்க நடவடிக்கை

திருவண்ணாமலை, மே.31- திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு அகன்ற அலைவரிசை இணைய சேவை வழங்க தமிழ்நாடு கல்வித்துறை மற்றும் பிஎஸ்என்எல் நிறுவனம்  இடையில் ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆனால்  இலவசமாகக் தரவேண்டிய இந்த இணைப்பை தர முறைகேடாக பணம் கேட்டு வந்ததாகவும் பணம் கொடுக்காத பள்ளிகளுக்கு  இணைப்பு வழங்காத நிலை இருந்ததாகவும் புகார் எழுந்தது. இது தொடர்பான புகாரை அடுத்து  சென்னையில் இருந்து வந்த பிஎஸ்என்எல் உயர் அதிகாரிகள் தலைமை ஆசிரியர்கள் இடையே செங்கத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.  இந்த பேச்சு வார்த்தையில் இரண்டு நாட்களுக்குள் பகுதி அளவு இணைப்புகளையும்  மீதமுள்ள இணைப்புகளை 15 நாட்களுக்குள்ளும் எந்தவித பணமும் கேட்காமல் இணைப்பு வழங்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அதை பி.எஸ்.என்.எல் அதிகாரிகள் ஒப்புக்கொண்டனர். இந்த பேச்சுவார்த்தையில் தமிழ்நாடு பழங்குடியினர் நல ஆன்றோர் மன்ற உறுப்பினர் ராஜவேலு,  மூத்த வழக்கறிஞர் அபிராமன், ஓய்வு பெற்ற பிஎஸ்என்எல் அலுவலர்கள் பழனி, சேகர், மாவட்ட அலுவலர்கள்  ரமேஷ், குமார், பாபு, ராமானுஜம் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


 

 

;